“மேலும் படிக்க”
Sunday, 22 August 2010
வாழ்க்கையில் வறுமையிலே.. வாழ்ந்த கார்ல் மார்க்ஸ்.
“மேலும் படிக்க”
Wednesday, 23 June 2010
உலகுக்கு கேட்கட்டும். ஊமைகள் பேசுவது..!! பர்மாவில்(myanmar) இருந்து ஒரு குரல்.!!
Sunday, 6 June 2010
Thursday, 29 April 2010
பாரதிதாசன்

இன்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் 119 பிறந்த தினம்.
புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.
இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.
Wednesday, 21 April 2010
உங்கள் வயது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த நொடியுடன் உங்கள் வயது என்ன தெரியுமா?
இதோ கீழுள்ள வயது புள்ளி விபரக் கணிப்பானிடம் உங்கள் பிறந்தத் திகதி, நேரத்தை கொடுத்தீர்களானால். புள்ளி விபரங்களை அறிந்துகொள்ளலாம்.
Tuesday, 6 April 2010
மழை..!!
மழை பற்றி நா.முத்துகுமார்...

மழை ஒரு காதலி
வருவதாய் காக்க வைத்து
வராமலே போகிறது!
மழை ஒரு கன்னிப்பெண்
அழும்போதும்
அழகாக இருக்கிறது!
மழை ஒரு குழந்தை
கையில் கிடைத்தவற்றைக்
கிழித்து வீசுகிறது!
“மேலும் படிக்க”
மழை ஒரு அரசியல்வாதி
எப்போதாவது ஒரு முறைதான்
தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்கிறது!
மழை ஒரு குடிகாரன்
தண்ணி அடித்துக்கொண்டே
தரைமேல் விழுகிறது
மழை ஒரு ஊதாரி
கிறுக்குப்பிடித்து
கடலில் விழுகிறது!
மழை
நீர் தெளித்து
மனிதர்களைத்
தூமைப்படுதுகிறது!
மனிதர்கள்
குடைப்பிடித்து
மழையை
அசுத்தப்படுத்துகிறார்கள்!
மழை
ஒழுகி, பாத்திரங்களில்
ஜலதரங்கம் வாசிக்கும்!
மழையை ஜன்னலில்
இருந்து பார்க்காதே...
ஜன்னலை மழையில் இருந்து பார்!!
Thursday, 11 March 2010
கொஞ்சம் இருங்க.. புதுசா கையடக்க தொலைபேசி (கைபேசி) வாங்க போறிங்களா..?
முதல் முறையாக மலரில் தொழில் நுட்பம் பதிவு. தொழில் நுட்ப பதிவாளர்களின் கோட் பாதர் பிகேபியின் வழியில்.. தொழில் நுட்பம் என்பது கடல் போன்றது அதில் விழும் ஒரு மழைத்துளியாக என் பதிவும் இருக்கட்டுமே ..
“மேலும் படிக்க”
கையடக்க தொலைபேசி இது இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக உள்ளது. அப்படி இருக்கும் பொழுது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று ஒருகடையில போய் கைபேசி வாங்கமுடியுமா? ஏன் ஒரு துணைவியை தேடும் ஒரு நபரே யாதகம்,சாஸ்திரம் என்று இருக்கும் பொழுது மனைவியை விட நெருக்கமாக இருக்கும் கைபேசியை சாதாரணமாக வாங்கி விட முடியுமா என்ன.. அதற்காகத்தான் இந்த இணையத்தளம். புதுப் புது கைபேசிகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றது எல்லா வகை கைபேசிகளும் ஒரே தளத்தில் அதன் சிறப்புகள், பவனையாளர்களின் கருத்துக்கள் என பல பல இந்த பக்கத்துக்கு போய்த்தான் பாருங்களேன்..
click
http://www.gsmarena.com/
Monday, 15 February 2010
கிறுக்கியதில் கிழித்துப்போட்டது.!
பிறப்பு.!
இறப்பின் ஆரம்பம்.
இளமை.!
முதுமையை தொடும் வரை.
அழகு.!
முகச்சுருக்கம் விழும்வரை.
அம்மா.!
இவ்வுலகில் "அன்பு" இருக்கும் வரை.
அப்பா.!
நான் இவ்வுலகில் இருக்கும் வரை.
“மேலும் படிக்க”
நான்.!
என்னை நான் கண்ணாடியில் பார்க்கும் வரை.
கேள்வி.!
விடை கிடைக்கும் வரை.
காதல்.!
........... silint இதுவரைக்கும் எதுவும் தெரியல..
தெரிந்தால் இனிவரும் பதிவில் சொல்கிறேன்.
நட்பு.!
............ கற்பை போன்றதாம் so no commentes
நண்பி.!
காதலியாகாமல் இருக்கும் வரை.!
ஈழம்.!
அது தமிழ் தாயின் கனவு (கண்டிப்பாய் என்றோ ஒருநாள் நனவாகும்).
தமிழ்.!
அது என் சுவாசம்.
english (ஆங்கிலம்).!
ficker மாட்டும் வரைக்கும்.
வாள் ஏந்திய சிங்கமும்.!
சிரிக்கிறது தமிழனை பார்த்து.
தமிழர் கைகள்(உறவு) வலுவானால்
சிங்கம் கூட பயந்தோடும்.
பிரபாகரன்.!
அது எங்க குல சாமி.
அன்றைய கியுபாவிற்கு ஒரு சே குவேரா..
இன்றைய தமிழீழத்துக்கு ஒரு பிரபாகரன்.
தோல்விகள் இல்லாமல்
வெற்றியின் சரித்திரம் எழுதப்படுவதில்லை.
Tuesday, 9 February 2010
ஆண் + பெண் = காதல்(ர்)தினம் February 14
இப்போதுள்ள காலத்தில் கடவுளைக் கூட கண்டுபிடித்துவிடலாம் காதலை கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது.. ஏன் என்றால் இப்போதுள்ள பெண்களிடம்( மன்னிக்கணும் பெண்களை மட்டும் உதரணத்துக்கு எடுத்து கொண்டதற்கு.. ஆண்களும் கூட உண்டு.) "வெயிட்டன பார்ட்டியா"னு பார்த்துத்தான் காதலே வருதாம். சரி விசயத்துக்கு வருவோம்
“மேலும் படிக்க”
காதல் என்றால் அன்பு. (நான் சொல்றது சரிதானே..!) அப்படி என்றால் காதலுக்கு விசேட நாள் தேவை தானா? february-14 "காதலர் தினம்" 'காதலிக்கும் கன்றாவிகளே '..வருடத்தின் 365 நாளும் அவனிடமோ! அவளிடமோ! காதலை(அன்பு) வெளிப்படுத்திரிங்க அப்படி என்றால் எதுக்கு உங்களுக்கு காதலர் தினம்.? ஒரு பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ உண்மையான அன்பாக இருந்தால் 365 நாளும் காதலர் தினமே...
நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கும் நபரா.. அப்படினால் பெண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்.
- நீங்கள் நல்லவரா? கெட்டவரா? அது முக்கியம் இல்லை. உங்களிடம் விலை உயர்ந்த கை பேசி (Cell phone)IPhone இருத்தல் வேண்டும்.
- உங்களுக்கு சொந்தமான வாகன (van,car, ect..)வசதி இருத்தல் வேண்டும்.
- வங்கி கணக்கு Fixed deposit, or current account, or saving accountஇருத்தல் வேண்டும் கண்டிப்பாக ATM card இருத்தல் வேண்டும் போனசாக Cradit card இருத்தல் நல்லது.
- விதம் விதமாய் her style, dress அலங்காரம் பன்னுபவராக இருத்தல் வேண்டும்.
- கையில் ஒரு தங்க மோதிரம், கழுத்தில் ஒரு வெள்ளி சங்கிலி இருத்தல் வேண்டும். (கவரிங்காக இருந்தாலும் பிரச்சனை இல்லை பார்ப்பதற்கு தங்கம், வெள்ளியாக ஜோளித்தல் வேண்டும்.)
- மேலே சொன்ன எதுவுமே இல்லையா கவலைய விடுங்க நீங்கள் எதாவது ஒரு மேலைத்தேய நாடொன்றில் இருந்தாலே போதும் நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அழகு,அறிவு இல்லாடியும் பிரச்சனை இல்லை. (இது மேலைத்தேய கலாச்சாரத்துக்கு ஆசைபடும் பெண்களுக்கு மட்டும்)
- கஞ்ச்சதனம் இருக்கவே இருக்ககூடாது.
நீங்கள் ஒரு ஆண் மகனை காதலிக்கும் நபரா அப்படினால் ஆண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்.
- அதிகம் குண்டாகவும் இல்லாமல் அதிகம் மெலிந்த தேகமும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
- கண்டிப்பாக உங்களுக்கு "தங்கை" இருத்தல் வேண்டும்
- Modern girl இருத்தல் வேண்டும் (ஒரு சில ஆண்களுக்கு மட்டும்)
- அப்பா நல்ல வசதி வாய்ப்புகளோடு இருத்தல் வேண்டும்.
- மேலே சொன்ன எதுவுமே இல்லையா அப்படியானால் கவலையை விடுங்க அழகும், அறிவும் நிறைந்த குடும்ப விளக்காக இருந்தாலே போதும்.
குறிப்பு: இது சும்மா டைம் பாஸ்க்கு எழுதியது
Tuesday, 2 February 2010
இப்படியும் நடக்குதுங்கோ இங்க..
தி கிரேட் மலேசியா. ஆசியா நாடுளில் வளர்ந்துவரும் நாடுகளில் மிக முக்கியம் வாய்ந்த நாடு. அப்படி இருக்கையில் நாட்டின் முதுகெலும்பே இளைஞர்கள்தான். அதில் எந்தமாற்றமும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது ஒரு சில ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள். சிலர் இப்படியும் நடந்து கொள்கிறார்கள் அண்மையில் இங்கு நடந்த ஒரு உண்மைச்சம்பவம். இதைப் படிக்கும் உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞகளை நினைக்கையில் உங்களுக்கு என்ன தோன்னுது....... நாட்டில் இளைஞர்களை கூலிப்படைகளாக பயன் படுத்தி கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதால் பெண்கள் தனியாக நடந்து செல்லவே பயப்படுகிறார்கள். சில வழிப்பறி சம்பவங்களால் மரணச் சம்பவங்களும் நடந்தது உண்டு.
“மேலும் படிக்க”
பெண்கள் கழுத்தில் சங்கிலியோ, தலிக்கொடியோ அணிந்து கொண்டு நடமாட முடிவதில்லை. நாள் தோறும் எதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கிறது அண்மையில் வேலை முடிந்து வீடு செல்ல விருப்பிய ஒரு குடும்ப பெண். தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை தனது கைப்பையில் பத்திரபடுத்திக் கொண்டு அதற்கு பதிலாக ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொண்டு சென்றார்.
சாலையில் அப் பெண்மணி செல்லும் பொது மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்களில் பின்னல் இருந்த ஒருவன் மஞ்சள் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்றான். சிறிது துராம் சென்ற பிறகு அந்த மஞ்சள் கயிற்றை பார்த்த அவன் மீண்டும் அந்த பெண்மணியிடமே திரும்பி வந்தான். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அப்பெண்ணுக்கு அந்த மஞ்சள் கயிற்றை கட்டி இனிமேல் உனக்கு நான் தாண்டி புருஷன் என்றானாம்.
அந்த மஞ்சள் கயிற்றில் மஞ்சள் துண்டுதான் இருந்தது. பெண்கள் அணியும் மஞ்சள் கயிற்றில் தங்கம் அணிந்திருப்பார்கள். அப்படி எதிர்பார்த்த அந்த வழிப்பறி திருடனுக்கு ஒன்றும் அகபடாததால் ஆத்திரத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிச் சென்றான்.
தனியாக செல்லும் பெண்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். இப்படியும் சில வழிப்பறி திருடர்கள் நடமாடுகிறார்கள்.
Wednesday, 20 January 2010
விலைமாதர் கண்ணீர்
எல்லா சாதியம் தீண்டுகிற எச்சில் சாதி எங்கள் சாதி.!
எல்லா மதமும் கலக்கின்ற எங்கள் மதம் மன்மதம்.!
இனிப்பு கடை நாங்கள் எல்லோருக்கும் திண்பண்டம்.!
குனிந்து வருகிற நீதிபதி, குற்றவாளியும் அடுத்தபடி.!
“மேலும் படிக்க”
தனயன் நுழைய முன்வாசல்
தந்தை நழுவ பின்வாசல்.!
மூடாதிருக்கும் எப்போதுமே எங்கள் வாசல்.!
நித்தம் ஒரு கணவன் குறைவில்லை
நிரந்தர கணவன் வரவில்லை
புதுமணப் பெண்போல தினம் தோறும்
பொய்க்கு இளமை அலங்காரம்.!
தத்துவஞானிகள் மத்தியிலே தசையவதானம் புரிகிறோம்
உத்தமப்புத்திரர் பல பேருக்கு ஒருநாள் பத்தினி ஆகிறோம்.!
மேடையில் பெண்கள் விடுதலை பேசியபின் வந்து
மேதையும் எங்களை தொட்டனைப்பான்
நாங்கள் ஆடைகள் கட்ட நேரமின்றி ஆண்களை மாற்றிக்கட்டுகிறோம்.!
உப்பு விலைதான் எங்கள் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்தநிலை.!
தப்புத்தான் விடமுடியவில்லை
தருமம் சோறு போடவில்லையே...!
உலகத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள் ஆனால் இவர்களின் மற்றம்??? எப்பொழுது ஒரு மனிதன் அன்புக்கு அடிமைப்படாமல் காமத்துக்கு அடிமைப்பட்டால் இது தொடர் கதைதான். இதை பார்த்துகொண்டு இருக்கும் இந்த நிமிடம் முதல் உலகத்தில் எங்கயோ ஒரு முலையில் இந்த சமூகத்தாலும், காம அரக்கர்களாலும் ஒரு விலைமாது உருவாகிக்கொண்டுதான் இருக்கிறாள். இந்த உலகத்தில் இதை மாற்று வதற்கும் வழியுண்டு அந்த முன்று எழுத்துக்களால் மட்டுமே இதை மாற்ற முடியும். "அன்பு"
ஒவ்வொரு உயிர் மேலயும் அன்பு செலுத்துவோம்.
உங்கள் கருத்துக்கள் எதிர்பார்கிறேன்..
உங்கள் கருத்துக்கள் தான் மலர் வளர்வதுக்கான உட்டச்சத்து.
நன்றி :கவிதைகள் தென்றல் வாரந்திர பத்திரிகை
Friday, 15 January 2010
என் பதிவுக்கு.! எனது விளக்கம்.!

“மேலும் படிக்க”
உலக மக்கள் தொகையில் ௦0.99 விழுக்காடு நம் தமிழ் மொழி பேசும் மக்கள். 66.06 மில்லியன் மக்கள் பேசும் மொழி இந்த உலகுக்கு நாகரிகத்தை சொல்லிகொடுத்த மொழி. பல வரலாற்றையும் பல சரித்திரங்களையும் கொண்ட மொழி. இப்படி இருக்கும் ஒரு தேசிய இனம். இப்பொழுது அடிமைப்பட்டுகிடப்பது ஏன்.! நீங்கள் சித்தித்தது உண்டா? உங்கள் இதயத்தில் கை வைத்து சொல்லுங்கள் ஒவ்வொருவரும் எங்கயோ எதுக்கோ அடிமைப்பட்டுத்தான் இருகிறிர்கள்.! சிலபேர் பதவிகளுக்கும், பலபேர் மேலைத்தேய கலாச்சாரத்துக்கும். அடுத்து உலகத்திலே ஒற்றுமை இல்லா இனம் என்று மார்தட்டிச் சொல்லுங்கள்.. ஏன்.. ஏன்.. இப்படி..! ஒரு விநாடி சிந்தித்தது உண்டா? இப்பொழுது நம் இனத்தின் அடையாளம் என்ன? இப்படி இருந்தோமானால் அடிப்பவன் அடிக்கத்தான் செய்வான் அடிவாங்குபவன் ??????????????? இப்படி இருந்தால் நிச்சயமா எத்தனை பெரியார் வந்தாலும் சரி எத்தனை பிரபாகரன் சரி உங்களை ம்ம்.. ம்ம்.. ம்ம்..
Wednesday, 13 January 2010
அவசரமானதும்..! அவசியமானதும்..!
தமிழர்களின் திரு நாளாம் தைப்பொங்கல். அப்படியா..! திங்கிறதுக்கு எதாவது கிடைக்குமா? இப்போதுள்ள தமிழன் இப்படிதான் கேட்டு அலையுறான். இலங்கையிலோ மஹிந்த சிந்தனையில அன்னதானம் போட்டுறான் சந்தோசபடுங்க அதில முதல் பந்தியில நம்ம தமிழன்தான் இருக்கானாம். தமிழ்நாட்டு தமிழனோ புரியாணிக்காக அலையுறான். வெளிநாடுகளில் உள்ள தமிழனோ எங்க ஓசில சாப்பாடு போறான்கள். சாப்பாடு சாமான்கள் குடுக்கிறான் என்று அலையுறான். ஐயோ கடவுளே நெஞ்சு பொறுக்கலையே..!
“மேலும் படிக்க”
^
^
^
^
சரி விசயத்துக்கு வருவம் தமிழர் திருநாள்,தமிழர் புது வருடப்பிறப்பு இது உங்க கலாச்சாராம்,பண்பாடு, மறக்கலாமா? நீங்கள் எந்த மதத்திலையும் இருங்க நான் அதைப்பற்றி சொல்லவரவில்லை. பொங்கல்,வருடப்பிறப்பு மதம் சார்பானது அல்ல இனம் சார்பானது. ஆகவே தமிழர் திரு நாளை எல்லோரும் இணைந்து மற்ற இனங்களுக்கிடையே நல்ல நட்புறவு கொண்டு சிறப்பாக கொண்டாடுவோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். கடந்த ஆண்டு தமிழர்களுக்கு கசப்பான ஆண்டாக அமைந்தது . வரும் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய ஆண்டவனை வேண்டிகொள்வோம். உலகில் உள்ள எல்லா தமிழனுக்கும் வருட பிறப்பு,தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.
நான் மேலே எழுதியவை....
தொப்பி அளவாக இருந்தால் யார் வேணுன்னாலும் போட்டுங்குங்க
யார் மனதும் காயப்படும் படியாக இருந்தால் மன்னிக்கவும். உங்கள் கருத்துகள் எதிபர்க்கடுகின்றன..
Sunday, 3 January 2010
காதலிப்பவர்களுக்கு மற்றும் காதலிக்க போகிறவர்களுக்கு மட்டும்.
இந்தவருடத்தின் முதல் பதிவை காதலர்களுக்காக பதிவதில் மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் பிரியமானவரிடம் உங்கள் காதலை எந்த மொழியில் தெரியப்படுத்தப் போறீங்க 100 மொழிகளில் "நான் உன்னை காதலிக்கிறேன்" என்ற வார்த்தையை எப்படி சொல்கிறார்கள் கிழே பாருங்க
+++காதலியிடம் திட்டு வாங்கியோர் சங்கம்+++
- English - I love you
- Afrikaans - Ek het jou lief
- Albanian - Te dua
- Arabic - Ana behibak (to male)
- Arabic - Ana behibek (to female)
- Armenian - Yes kez sirumem
- Bambara - M'bi fe
- Bengali - Ami tomake bhalobashi (pronounced: Amee toe-ma-kee bhalo-bashee)
- Belarusian - Ya tabe kahayu
- Bisaya - Nahigugma ako kanimo
- Bulgarian - Obicham te
- Cambodian - Soro lahn nhee ah
- Catalan - T'estimo
- Cherokee - Tsi ge yu i
- Cheyenne - Ne mohotatse
- Chichewa - Ndimakukonda
- Chinese
- Cantonese - Ngo oiy ney a
- Mandarin - Wo ai ni
- Comanche - U kamakutu nu
- (pronounced oo----ka-ma-koo-too-----nu) -- Thx Tony
- Corsican - Ti tengu caru (to male)
- Cree - Kisakihitin
- Creol - Mi aime jou
- Croatian - Volim te
- Czech - Miluji te
- Danish - Jeg Elsker Dig
- Dutch - Ik hou van jou
- Elvish - Amin mela lle (from The Lord of The Rings, by J.R.R. Tolkien)
- Esperanto - Mi amas vin
- Estonian - Ma armastan sind
- Ethiopian - Afgreki'
- Faroese - Eg elski teg
- Farsi - Doset daram
- Filipino - Mahal kita
- Finnish - Mina rakastan sinua
- French - Je t'aime, Je t'adore
- Frisian - Ik hald fan dy
- Gaelic - Ta gra agam ort
- Georgian - Mikvarhar
- German - Ich liebe dich
- Greek - S'agapo
- Gujarati - Hoo thunay prem karoo choo
- Hiligaynon - Palangga ko ikaw
- Hawaiian - Aloha Au Ia`oe
- Hebrew
- To female - "ani ohev otach" (said by male) "ohevet Otach" (said by female)
- To male - "ani ohev otcha" (said by male) "Ohevet ot'cha" (said by female)
- Hiligaynon - Guina higugma ko ikaw
- Hindi - Hum Tumhe Pyar Karte hae
- Hmong - Kuv hlub koj
- Hopi - Nu' umi unangwa'ta
- Hungarian - Szeretlek
- Icelandic - Eg elska tig
- Ilonggo - Palangga ko ikaw
- Indonesian - Saya cinta padamu
- Inuit - Negligevapse
- Irish - Taim i' ngra leat
- Italian - Ti amo
- Japanese - Aishiteru or Anata ga daisuki desu
- Kannada - Naanu ninna preetisuttene
- Kapampangan - Kaluguran daka
- Kiswahili - Nakupenda
- Konkani - Tu magel moga cho
- Korean - Sarang Heyo or Nanun tangshinul sarang hamnida
- Latin - Te amo
- Latvian - Es tevi miilu
- Lebanese - Bahibak
- Lithuanian - Tave myliu
- Luxembourgeois - Ech hun dech gaer
- Macedonian - Te Sakam
- Malay - Saya cintakan mu / Aku cinta padamu
- Malayalam - Njan Ninne Premikunnu
- Maltese - Inhobbok
- Marathi - Me tula prem karto
- Mohawk - Kanbhik
- Moroccan - Ana moajaba bik
- Nahuatl - Ni mits neki
- Navaho - Ayor anosh'ni
- Ndebele - Niyakutanda
- Norwegian
- Bokmaal - Jeg elsker deg
- Nyonrsk - Eg elskar deg
- Pandacan - Syota na kita!!
- Pangasinan - Inaru Taka
- Papiamento - Mi ta stimabo
- Persian - Doo-set daaram
- Pig Latin - Iay ovlay ouyay
- Polish - Kocham Ciebie
- Portuguese - Eu te amo
- Romanian - Te iubesc
- Russian - Ya tebya liubliu
- Scot Gaelic - Tha gra\dh agam ort
- Serbian - Volim te
- Setswana - Ke a go rata
- Sign Language - ,\,,/ (represents position of fingers when signing 'I Love You')
- Sindhi - Maa tokhe pyar kendo ahyan
- Sioux - Techihhila
- Slovak - Lu`bim ta
- Slovenian - Ljubim te
- Spanish - Te quiero / Te amo
- Swahili - Ninapenda wewe
- Swedish - Jag alskar dig
- Swiss-German - Ich lieb Di
- Surinam - Mi lobi joe
- Tagalog - Mahal kita
- Taiwanese - Wa ga ei li
- Tahitian - Ua Here Vau Ia Oe
- Tamil - Nan unnai kathalikaraen
- Telugu - Nenu ninnu premistunnanu
- Thai
- To female - Phom rak khun
- To male - Chan rak khun
- Informal - Rak te
- Tunisian - Ha eh bak
- Turkish - Seni Seviyorum
- Ukrainian - Ya tebe kahayu
- Urdu - mai aap say pyaar karta hoo
- Vietnamese
- To female - Anh ye^u em
- To male - Em ye^u anh
- Welsh - 'Rwy'n dy garu di
- Yiddish - Ikh hob dikh
- Yoruba - Mo ni fe
- Zazi - Ezhele hezdege
- Zuni - Tom ho' ichema
பின்குறிப்பு :-
இதைப் பார்த்து காதலியிடமோ அல்லது ......?????....
அடி விழுந்தாலோ அல்லது உதை விழுந்தாலோ, செருப்பால் அடித்தலோ அதற்கு மலர் பொறுப்பல்ல.
அன்பால் இணைந்தவர்கள்
இப்ப மணி என்ன..
தமிழில் எழுதுவதற்கு...
என்னை பற்றி நான் சொல்லனுமா?

- மலர்
- என்னைப்பற்றி.. சொல்வதற்கு ஒன்றும் இல்ல My heart know it's own sorrow. எனது துக்கத்தை எனது இதயம்தான் அறியும். ரூம் போட்டு ஜோசிச்சு பார்த்தேன் "நான் யார்? என்னைப்பற்றி என்ன சொல்ல இதற்கான விடைதான் இன்னும் கிடைக்கவில்லை எனக்குள்ளே என்னை தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் தேடல் தொடர்கிறது... பல தேடல்களோடு.. இப் பிரபஞத்தில்.. தன்னைத்தானே புகழ்கிறவன் முட்டாள்.