Thursday 31 December 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்-2010


Glitter Graphics


தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத ஆண்டாக சென்ற 2009 இருந்தது. ஒவ்வொரு தமிழனும் உங்கள் அத்தியாயத்தில் குறித்துக்கொள்ளும் ஆண்டாக சென்ற ஆண்டு இருந்தது. இதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது। சில எட்டப்பனால் வந்த வினை. நமக்கு இழப்புக்கள் புதியவை அல்ல எங்கள் தியாக தீபங்களின் கனவை நனவாக்க வரும் ஆண்டிலேயே உறுதி கொள்வோமாக
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Wednesday 23 December 2009

நத்தார் தின வாழ்த்துக்கள்

Merry Christmas Comments For Hi5
அனைத்து வலைப்பதிவாளர் , நண்பர்களுக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்

மலேசியா விமானப்படைக்கு சொந்தமான விமான இயந்திரத்தை காணவில்லை..!


ஆசியா நாடுகளிலே மிக வேகமாக வளர்ந்துவரும் நாடு மலேசியா. 2020௦ என்ற தொலைநோக்கு பார்வையோடு வளர்ந்து வரும் நாடு. அதிநவீன கடற்படை, விமானப்படை, தரைப்படை உள்ள நாடு. இப்படி இருக்கும் பொழுது RM5 கோடி (மலேசியா நாணய மதிப்பில்) பெறுமானமுள்ள இயந்திரத்தை காணவில்லை என்றால்.. அந்த நாடுடைய ராணுவ கட்டமைப்பு நிலை?? இதனிடையே இவ்விகாரம் தொடர்பாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறு இருப்பினும் விசாரணையை துரிதப்படுத்தி இதற்கு தீர்வு காண்பதே நாடுக்கும் நாடு மக்களுக்கும் நல்லது.

Saturday 12 December 2009

2010ற்கான நோபல் விருது மஹிந்தவிற்கா??


இந்தவருட நோபல் விருது அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு வழங்கப்பட்டுள்ளது இது சரிதானா? உலகத்தில அமைதியை உண்டுபன்னுவம் உண்டுபன்னுவம் என்று சொல்லியே உலக அமைதியை கெடுப்பதும் அமெரிக்கதானே? தானும் நல்லா இருக்ககூடாது மற்றவனும் நல்ல இருக்ககூடாது இதுதானே அமெரிக்கவின் வெளிவுரவுக் கொள்கை. அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் விருது வாங்கியது தவறு என்று சொல்லவரவில்லை. அதிபர் ஒபாமா நோபல் விருது வாங்குவதற்கு இன்னும் நேரகாலம் இருக்கு. இந்த விருது அறிவிக்கும் பொழுதே 3000 துருப்புக்கள் தலிபான்களுடன் சண்டை போடுவதற்கு சென்றுள்ளனர். இப்படி இருக்கும் பொழுது அதிபர் ஒபாமா நோபல் விருது வழங்கியது சரிதானா? நோபல் விருது தேர்வு குழு என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் விருதுக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் சாதாரண வாசகன் என்றவிதத்தில் என் கேள்வி இது? இப்படி இருந்தால் அடுத்தவருடம் உலக சமாதானத்துக்கு பாடுபட்டவர் என்ற பெயரில் மஹிந்தவிற்கோ அல்லது சரத் பொன்சேகவிற்கோ வழங்கப்பட்டாலும் ஆச்சரிய படுறதுக்கு ஒன்றும் இல்லை.

Monday 30 November 2009

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை (தமிழீழம்) மறக்கலாமா?

இந்த பாடலைப் பாருங்கள் நண்பர்களே.. இந்த சமயத்தில் ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய கருத்துள்ள பாடல்.




உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா?

இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை மாறலாமா?

இப்பாடல்
பாதை மாறும் தமிழனுக்கு சமர்ப்பணம்.

Sunday 15 November 2009

உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் இவர்களுக்கு சொல்ல போகிற பதில் என்ன?


கார்த்திகை 27. தமிழர்களின் புனித நாள். தமிழர்களை உலக அரங்கில் தலை நிமிரவைத்த கதாநாயகர்கள். தமிழர்களுக்கு ஒளியை தந்துவிட்டு இவர்கள் ஒளியை அனைத்துகொண்டவர்கள். இவர்களின் கேள்விகளுக்கு உங்கள் மனசாட்சியில் இருந்து என்ன பதில் சொல்லபோறிங்க? இவர்களுக்கு உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் பதில் சொல்லணும். தமிழர்களே.. இவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்கள் உங்கள் ஒவ்வொரு மனதிலும். போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா? இவர்கள் இட்ட தீ என்றும் எம் மனதில் எரிமலையாக.. உங்கள் நினைவுகளோடு விரைவில் எங்கள் விடுதலையை வென்றெடுப்போம்.

இந்த நேரத்தில எங்கயோ பார்த்த கவிதைதான் ஞாபகத்திற்கு வருது

மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனன்
அனைவரும் கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

"புன்னகை" கவிதை இதழில் இருந்து

Saturday 24 October 2009

மலேசியாவில் ஈழ அகதிகளின் நிலை...




மலேசியாவில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுள்ள இலங்கை அகதிகள் 98 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வரவேற்கத்தக்கவை இருந்தாலும் அகதிகள் அடையாள அட்டை வைத்திருந்தும் கைதுசெய்வது தவறே.. இங்குள்ள அகதிகளுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் கடமை. கல்வி, மருத்துவம் போன்றவை மறுக்கபடுகின்றன இங்கு உள்ள குழந்தைகளின் எதிர்காலம் ?? கிட்டதட்ட 4000 பேர் அகதிகளாக ஐக்கிய நாடுகள் சபையில் பதிவுசெய்துள்ளனர். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கபடுவதலே இதற்கு மாற்று வழியாக உயிரை பணயம் வைத்து கடல் கடந்து செல்கிறார்கள்.


நாட்டிலும் வாழமுடியாமல் வந்த இடத்திலும் நிம்மதியாக வாழமுடியாமல் ரெண்டும் கேட்ட நிலைமை. இவர்களின் நிலைமைகளை மாற்ற போகிறவர்கள் யார்? உலக நாடுகளோ புத்தரின் கொள்கையிலே இருக்கிறது. (கண்களைமுடி தியானத்தில்...) இங்குள்ள ஒருசிலர் உதவி என்ற பேரில் RM40க்கு௦ அத்தியாவசிய பொருட்களை கொடுத்துவிட்டு RM400க்கு௦௦ விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் இவர்களுக்கு தேவை அத்தியாவசிய பொருட்கள் இல்லை அகதிகளுக்கான அடிப்படை உரிமையே..! நீங்கள் நாடோடிகளை பார்த்ததுண்டா? இல்லையென்றால் மலேசியாவில் உள்ள அகதிகளை வந்து பாருங்கள் இவர்களின் நிலைமையும் இதுவே.. இவர்களின் எதிர்காலம் இப்படியே போய்விடுமா? கடவுளும் காலமும் தான் பதில் சொல்லும்.

கதறல்களும் கருத்துகளும் தொடரும்...

மேலும்.. மேலும்.. எழுதுவதற்கு.. உங்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் தேவை.

நன்றி
இவர்களில் ஒருவன்.

Tuesday 8 September 2009

மலேசியாவில் 116௦ இலங்கையர்கள் கைது?


சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்லவிருந்த 116௦ இலங்கைத் தமிழர்கள் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருப்பதாக அறியப்படுகிறது இவர்கள் அனைவரும் மலேசியாவில் உள்ள 'ஐக்கிய நாடுகள் சபையில் (united nations high commissioner for rafugees) அகதிகளாக பதிவு செய்துள்ளனர். இவ்வளவு தொகையான பேர் கைதுசெய்யப்பட்டது இதுவே முதல் முறையாக அறியப்படுகிறது. 'ஐக்கிய நாடுகள் சபை'(UNHCR) அகதிகள் மேல் கட்டும் அக்கறை இன்மையே இவர்கள் உயிரை பணயம் வைத்து செல்வதாக அறியப்படுகிறது இனி 'ஐக்கிய நாடுகள் சபை' என்ன செய்ய போகிறது... பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும்.


செய்தி:
மலேசியாவில் இருந்து ஈழத்தமிழன்.

Friday 24 July 2009

நாம் தொடர்ந்து பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் மலரும்.


சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர் என்று கூறியுள்ளார் அருட் தந்தை ஜெகத் கஸ்பார்.

நக்கீரன் குழுமத்தின் இனிய உதயம் காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் பேட்டி அளித்துள்ளார். அதில் தான் பிரபாகரனை 2002ம் ஆண்டு சந்தித்தது குறித்து அவர் விளக்கியுள்ளார்.

பேட்டியில் ஜெகத் கஸ்பார் கூறியிருப்பதாவது:

என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில் மகத்தான ஒரு விடுதலைப் போராட்டம் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம் தான்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கட்டி எழுப்ப முடிந்தது என்றால், அதற்கு பிரபாகரன் என்ற மாபெரும் ஆளுமைதான் காரணம்.

தண்ணீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பில், மிக மிகச் சிறிய ஒரு இனத்தில் இருந்து, அண்டை நாடான இந்தியா எப்படியும் புலிகளை அழித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க-

உலகத்தில் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல், மரபுவழி ராணுவம் என்று நாம் சொல்கிற தரைப்படை, பீரங்கிப்படை, கடற்படை செறிந்த ஒரு புலனாய்வுப் பிரிவு, அனைத்துலக அளவிலான ஒரு கொள்வனவுப் பிரிவு, தேர்ந்த உளவுப்பிரிவு, இவற்றை எல்லாம் தாங்கி நடத்துவதற்காக ஒரு நிதிவள ஏற்பாடு, இன்னும் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு ஒரு நிர்வாகத்தைக் கொடுக்கிற மேலாண்மைப் பிரிவு என இத்தனையையும் கட்டி எழுப்பிய மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அபூர்வ ஆற்றல்கள் அமையப்பெற்ற ஒரு மனிதனால் மட்டுமே இது சாத்தியமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களுக்கு போர்க்குணம் இருந்தது என்று புறநானூற்றுக் காலத்தை நாம் சொன்னாலும், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் நாம் போர்க்குணம் மிக்க மக்களாக இருந்தோம் என்பதற்கு நம்மால் எந்தவித ஆதாரங்களையும் சொல்ல முடியவில்லை.

பெரிய அளவில் தொழில் முனைதல் இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட, எதையும் விதியே விதியே என்று ஏற்றுக் கொள்கிற ஒரு மக்கள் இனத்தின் மனவெளிகளுக்குள் புகுந்து புரட்சி செய்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கின்ற தலைமுறையையே உருவாக்கிக் காட்டிய மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது.

பிரபாகரன் ஒரு அதீத பிறவி...

பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.

தமிழ் இனம் பிரபாகரனால் தாழ்ந்ததா, உயர்ந்ததா என்று கேட்டால், உயர்ந்தது என்று உறுதியாகச் சொல்லுவேன். பிரபாகரனின் ஆளுமைக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சூழமைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் காலம் அப்படியே நீடித்திருக்குமானால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்கும். ரஷ்ய வல்லரசு உடைந்து போனதால் பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஈழப் போராட்டம் வளர்ச்சி கண்டிருந்தது. பனிப்போர் முடிந்தபிறகு உலகம் ஒற்றைத் திசையில் பயணப்பட தொடங்கியது. நமக்கான ஆதரவு சக்திகள் இல்லாமல் போனார்கள்.

ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப் படை, 15 ஆயிரம் அப்பாவித் தமிழர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலை எனும் துயர நிகழ்வு. ஆனால் 15 ஆயிரம் மக்களைச் சாகடித்த பழியும் குற்றமும் யாராலும் பேசப்படவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை மட்டும்தான் பேசப்பட்டது.

அதற்காக நான் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தவில்லை. அது நடந்திருக்கக் கூடாது. ராஜீவ் மரணத்திற்காக அழுதவர்களில் நானும் ஒருவன்.

ஆனால் அந்தவொரு நிகழ்வை வைத்துக்கொண்டு பழி வாங்கித் தீர்க்க வேண்டும் என்ற பழி உணர்ச்சியை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறது, வருகிறது.

இதையும் சந்தித்தபடி புலிகள் ஓர் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக முன்னேறி வெற்றிகளைக் குவித்து வந்த நேரத்தில்தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதம் என்பது ஓர் எதிர் அரசியலாக மாறுகிறது. இதன் எதிர்விளைவுகளை எல்லாம் புலிகள் இயக்கமும் சந்திக்க வேண்டிய கட்டாயம்.

உலக அளவில் புலிகளின் கட்டமைப்புக்கள், நிதிவளங்கள் எல்லாம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி, பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக முடங்கிப்போய் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்கள்.

களத்தில் அவர்கள் பெரும் வெற்றியைக் குவித்தாலும்கூட, விடுதலையை முன்நகர்த்திச் செல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனையிறவு வரைக்கும் வென்று ஏறக்குறைய தமிழ் ஈழத்தை சாதித்துவிட்ட நிலையில்தான்-

ஒருவகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வரப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது இயக்கத்துக்குள் பிளவை உண்டாக்கி, உளவு அமைப்புக்கள் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தினார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால் புலிகள் சமாதானம் பேசிய காலகட்டத்தில்தான் அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடுகள் மத்தியில் சித்தரித்துக் காட்டிய ஈன ராஜதந்திரத்தை சிங்கள அரசு கையாண்டது.

பிராந்திய அளவில், உலக அளவில் பகைவர்களாக இருக்கிற நாடுகள் எல்லாம் இந்த விஷயத்தில் சேர்ந்து நின்றார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நின்று சிறிலங்காவுக்கு கைகொடுத்தார்கள் என்பதைவிட, அள்ளிக் கொடுத்தார்கள் என்பது சரியாக இருக்கும்.

அதேபோல இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உதவினார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உதவினார்கள். ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உதவின. அவ்வளவு ஏன்- உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உதவி, தமிழ் இனத்தின் விடுதலை உணர்ச்சியைத் தகர்த்து எறிந்திருக்கிறார்கள்.

இத்தனை சக்திகளை மீறியும் புலிகள் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான வரலாறு. அதனை நீங்கள் மறுக்கவே முடியாது.

புலிகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அவற்றை எல்லாம் மீறி அவர்கள் தார்மீகப் போராட்ட நேர்மை கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்.

50,000 சிங்களர்களைக் கொன்று குவித்திருக்க முடியும்...

கடைசிக் கட்டப் போரில் அவர்கள் நினைத்திருந்தால் கொழும்பு நகரில் 50 ஆயிரம் பேரையாவது கொன்று குவித்திருக்க முடியும். அந்த அளவுக்கு ரசாயன ஆயுதங்களை அவர்கள் நிச்சயமாக வைத்திருந்தார்கள். ஆனால் செய்யவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் பார்த்தோமேயானால் சிங்களப் பேரினவாதம் எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்தார்கள், புலிகள் எத்தனை சிங்களவர்களைக் கொலை செய்தார்கள் என்று கணக்கெடுத்தால், புலிகள் உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாகப் போராடியிருக்கிறார்கள். கடந்த பத்து மாதத்தில் மட்டும் சிங்களப் பேரினவாதம் 60 ஆயிரம் பேரைக் கொன்று அழித்திருக்கிறது.

புலிகள் 600 பேரைக்கூட கொலை செய்யவில்லை. குறிப்பாக அப்பாவி மக்களைக் கொலை செய்யவே இல்லை. கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியபோது பயணிகளில் ஒரு உயிர் கூட போய்விடக் கூடாது என்று கவனத்தோடு தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய நாளன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் வானூர்தி தரை இறங்கியிருக்கிறது. பயணிகள் அனைவரும் வெளியே வந்தபிறகே தாக்குதலை தொடங்கினார்கள்.

புலிகள் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் 1:30 நிமிடத்துக்கே தாக்குதல் தொடங்கி இருப்பார்கள் என்றால், சிறிலங்கா வான்படையை அன்றே நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள்.

ஆனால் என்ன செய்வது? ஊடக பலம் இல்லை. உலகத்தில் எல்லோரும் அவர்களை அழித்துவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள்.

சந்திரிகா அம்மையார் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய பொருளாதாரத் தடையை அங்கு விதித்திருந்தார். கடுகைக் கூட தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டார். அப்படி இருந்தும் புலிகள் தம் மக்களைப் பட்டினிச் சாவில் விட்டுவிடவில்லை.

விவசாயத்தைத் திட்டமிட்டு அவர்கள் நடத்தினார்கள். ஏழு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும், எவ்வளவு தேங்காய் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு விவசாயத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

இவை எல்லாம் உலகத்துக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. எல்லா இயக்கங்களையும் போல இவர்களும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லா தவறுகளையும் மீறி ஒரு மகத்தான மக்கள் இயக்கமாக இருந்திருக்கிறார்கள்.

மாபெரும் மனிதர் பிரபாகரன்...

2002 ஆம் ஆண்டில் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக்கொண்டார். சின்ன போராளிகள் கூட அவருக்கு வணக்கம் சொல்லவில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள், அவ்வளவுதான்.

தனக்கு தாகம் எடுத்தபோதுகூட தானே போய் தண்ணீர் எடுத்து அருந்தினார். ஒரு தன்முனைப்பு இல்லாத மனிதர். எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, லட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாக, பிசிறில்லாமல் அவரால் பதில் சொல்ல முடிந்தது. மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர்.

இந்தியாவின் கையில் ரத்தப் பழி...

இந்தியாவின் கை இரத்தப் பழியை சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக் கொள்ள முடியாது.

கடைசிக்கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப்பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பொஸ்பரஸ் குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் 80 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என்றார்.

ஆனால் போர் முடிந்தபிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா?

அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டால்கூட பரவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.

அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த 10 ஆயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே 18 ஆம் நாள் சண்டையில் மட்டும் 20 ஆயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் தெரியாதவை அல்ல.

லண்டனில் இருந்து வெளிவருகின்ற டைம்ஸ்', 'கார்டியன்' பத்திரிகைகள், பாரிசில் இருந்து வெளிவருகிற லெமோண்ட் போன்ற உலக அளவில் மதிக்கப்படும் பத்திரிகைகள் இவற்றை எல்லாம் பதிவு செய்திருக்கின்றன.

இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்காவை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியில் இருந்து சிறிலங்காவின் பின்நின்ற பாவத்தில் இருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியாது. வரலாற்றின்- மனச்சாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழைய சலித்துப் போன உண்மையைத்தான் நானும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உலகம் முழுவதும் தமிழர்கள் ஒரு கருத்தில் பிளவுபடாமல் இணைந்து நின்றார்கள் என்றால், உலகம் நமது கோரிக்கையைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்- இது ஒன்று.

கொரில்லாப் போர் வரும்...

நாம் இனி இரண்டு திசைகளில் பயணப்படவேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்குத் துணையாக அரசியல் பின்னால் நின்றது. இப்போது அரசியல் போராட்டம் முதன்மை பெறும். ஆயுதப் போராட்டம் முடியவில்லை. அது கட்டாயம் தொடர்ந்து நடக்கும். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு கெரில்லாப் போர் மையம் கொள்ளும்.

இந்தப் போரினால் பாதிக்கப்படாத உங்களுக்கும் எனக்குமே இவ்வளவு வேகம் இருக்கும் என்றால், நேரடியான பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு எத்தனை கோபம் இருக்கும். எனவே கெரில்லாப் போர் நிச்சயம் நடக்கும். ஆனால் அதனைவிட மேலாக உலக அளவில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும்.

தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் என்பது, அனைத்து இந்திய மக்களுக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்வது, ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் ஈழம் பற்றி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.

முல்லைத்தீவில் நடந்த அந்த உச்சபட்சக் கொடுமைதான் தமிழீழத்துக்கான தார்மீக நியாயப்பாடாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. தொடர்ந்து நாம் பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் வரும் என்பது எனது நம்பிக்கை என்றார் ஜெகத் கஸ்பார்.



+++நன்றி+++
www.தட்ஸ்தமிழ்.com

Thursday 18 June 2009

நாம் தமிழராய் பிறந்ததுதான் குற்றமா?

ஏய் சர்வதேசமே..! ஏன் புத்தரைப்போல் கண்களைமுடி தியானத்தில் இருக்கிறாய். கண்ணை திறந்து பார். பாதையில் செல்லும் பார்வை இழந்தவராய் நிக்கிறோம்... நாங்கள் செய்த தவறுதான் என்ன? எங்கள் உரிமைகளை நாங்கள் பெற்று பாட்டன் முப்பாட்டன் நிலத்தில் சுகந்திரமாக வாழ நினைத்தது தவறா?


நாங்களும் மனிதர்கள் தானே











இவர்களின் எதிர்காலம்.........?














நான் தமிழச்சியாக பிறந்ததுதான் தவறா?





ஐயோ கடவுளே.! என் இந்த குழந்தையை இங்கே பிறக்கவைத்தாய்?

Thursday 11 June 2009

இது உங்கள் கவனத்திற்கு...

நீங்கள் பொது இடங்களுக்கு செல்லும் பொது இதையும் கொஞ்சம் கவனியுங்கள்.
















































Wednesday 20 May 2009

இதையும் கொஞ்சம் பாருங்களேன்...

சிங்களவனின் கொட்டம் எல்லாம் இதோடு அடங்கிவிடும். எங்கயோ இருந்து கொண்டுவந்த ஆசாமி முகத்தில பிரபகரண்ட முகமூடிய போடு எங்களுக்கு எல்லாம் வித்தை காட்டின சிங்கள சொறியர் கூட்டம் இப்ப வெக்கி தலை குனிகேறது. இந்த படத்தை பார்த்தல் எல்லாம் உங்களுக்கு விளங்கும்.

இவர் தான் அந்த உடம்புக்குரிய ஆள்



அந்த உடம்புக்கு ஒரு முகமூடி போட்டு பூசாண்டி காடுரங்கள்
ஐயோ ஐயோ .... சிரிக்க சிரிக்க சிரிச்சு கொண்டே இருக்கலாம். ....


நன்றி: கலகம்.

Tuesday 14 April 2009

தோல்வி..!

தோல்வி ஒரு
சிற்பி !
பல வரலாறுகள் இந்த
சிற்பி செதுக்கியது தான் !

தோல்வி ஒரு
நெருப்பு !
நிறைய தீபங்களை இந்த
நெருப்புதான் ஏற்றியது !

தோல்வி ஒரு
அணை !
ஏராளமான நதிகள் இந்த
அணையிலிருந்து கிளம்பின….

தோல்வி என்பது
முடிவல்ல…
இடைவெளி !
தோல்வி ஒரு
அவஸ்தை அல்ல
அவகாசம் !

தோல்வி என்பது
தண்டணை அல்ல !
எச்சரிக்கை !

Friday 3 April 2009

இதற்குப் பெயர் தான் காதலா?




நந்தனம் சிக்னலுக்கு அருகிலிருக்கும் ஜனதாமெஸ்ஸின் வாசலில் ஒரு நாள் தம்மின் கடைசி இழுப்பை ரசித்தவாறு இழுத்துக் கொண்டிருந்தபோது தான் முதலில் அவளைப் பார்த்தேன். மஞ்சள் பூப்போட்ட சுடிதார். கண்ணுக்கு மஸ்காரா. காதுக்கு பெரிய ஸ்டப்ஸ். கொஞ்சம் குள்ளமாக இருந்ததால் ஆறு இன்ச் செருப்பு. சிகப்பு என்று சொல்ல இயலா அளவுக்கு மாநிறம். பயங்கர அழகியென்று சொல்லமுடியாவிட்டாலும் சுமாரான அழகிதான்.பார்த்ததுமே பச்சக்கென்று ஒட்டிக் கொண்டாள். தம்மின் கடைசி இழுப்பை இழுத்த எனக்கு இருமல் வந்தது.

கண்களில் நீர், என்னவளை கண்டுக் கொண்டதால் வந்த ஆனந்தக் கண்ணீரா? இல்லை கொசுவண்டி அளவுக்கு புகையைத் தள்ளிச்சென்ற யமஹாவின் கைங்கரியமா தெரியவில்லை. ஒரே ஒரு நொடிதான்! என் இதயம் என்னைவிட்டு விண்ணில் பறப்பதை உணர்ந்தேன்.

நந்தனம் சிக்னலில் கண்ட மயிலின் நினைவே இருநாட்களுக்கு என் உள்ளத்தை கொள்ளை கொண்டிருந்தது. திரும்ப அவளைப் பார்க்கமுடியுமா? முடியாதா? என்பது தெரியாமலேயே அவள் பால் என் உள்ளம் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அறை நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு காதலி உண்டு. எப்படி காதலிக்கிறார்கள்? காதலை எப்படி சொன்னார்கள்? என்று கதைகதையாய் சொல்லும்போது ”எனக்கொரு கேர்ள் பிரண்டு வேணுமடா?” என்று மனதுக்குள் வேதனையாய் பாடுவேன்.

கடந்து செல்லும் பெண்களையெல்லாம் காதலிக்கச் சொல்லும் வயசுதான் என்றாலும் என் காதலி யாரென்று தெரியாமலேயே, காதலிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லாமலேயே வீணாகிக் கொண்டிருந்த என் காலம் அந்த மஞ்சள் மைனாவின் திடீர் வரவால் வசந்தமானது.

அவள் தான் என் காதலி என்று முடிவெடுத்துவிட்டேன். ஒருமுறை கண்டவளை மறுமுறை காண இப்போதெல்லாம் தினமும் ஏங்குகிறது என் மனது. ஒரு கோடி பேர் வந்து செல்லும் சென்னை மாநகரில் எங்கேதான் அவளை தேடுவது?பெண்கள் வந்துப் போகும் கோயில்களில் எல்லாம் தினமும் மாலையில் தேடுகிறேன். ஸ்பென்ஸர் ப்ளாஸா, அல்சா மால் பக்கம் செல்லும்போதெல்லாம் மஞ்சக்குருவி தென்படுகிறாளா என்று பார்வையை ஓட்டுகிறேன். மகளிர் கல்லூரிகளை கடைக்கும்போதெல்லாம் மஞ்சள் மைனா மாட்டுவாளா என்று என் கண்கள் ஏங்குகிறது.

அவளை முதன்முறையாக கண்டபோது எனக்கு இருமல் வந்ததால் இப்போதெல்லாம் இருமல் வராவிட்டாலும் கூட இருமி, இருமி அவளை நினைவுப் படுத்திக் கொள்கிறேன். அதிகமாக இருமுவதால் எச்சில் துப்பும்போது எச்சிலோடு இரத்தமும் வருகிறது. தொண்டையில் புண் என்று நினைக்கிறேன். பிரிவுத்துயரால் பசலை நோய் கண்டு நான் அடிக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை கூடுகிறது.

அவளின் நினைவால் எப்போதும் வானத்தில் பறப்பது போல இருக்கிறது. 32 இன்ச் இருந்த என் இடுப்பு திடீரென்று 28 இன்ச்சாக குறைந்துவிட்டது. 65 கிலோ இருந்த நான் 52 கிலோ ஆகிவிட்டேன். தூக்கம் வருவதில்லை. பெண்களை சைட் அடித்தால் முகத்தில் பரு வரும் என்பார்கள். அவளைத் தவிர வேறு யாரையும் சைட் அடிக்கப் போவதில்லை என்ற போதிலும் பருக்கள் போன்ற சிறுசிறு கட்டிகள் முகத்திலும், மார்பிலும் வருகிறது.முன்பெல்லாம் ஒரு நாளைக்கு மூன்று முறை மூக்கு முட்ட தின்றுக் கொண்டிருந்த நான் இப்போது மதிய உணவு மட்டும் வேண்டா வெறுப்பாக சாப்பிடுகிறேன்.

இரவுகள் வியர்க்கிறது. பகலில் குளிருகிறது. வைரமுத்து சொன்னது போல வயிற்றுக்குள் இருந்து ஏதோ ஒரு பந்து இதயம் வரை அவ்வப்போது எழுகிறது. சே! காதல் இத்தனை அவஸ்தைகளை தருமா?எப்போதும் எதையோ செதுக்குவது போல உணர்வு, வேலையிலும் - படிப்பிலும் கவனமின்மை, சக்தி முழுவதும் வடிந்துவிட்டது போல ஆயாசம், இரத்த அணுக்களெல்லாம் மொத்தமாக ஒரே நாளில் செத்துப் போனது போல விரக்தி, நாள் முழுக்க கல்லுடைப்பவனுக்கு கூட அத்தனை வலி இருக்காது. கை, கால், தோள், வயிறு, இதயம் எனக்கு நினைவுக்கு வரும் உறுப்புகளில் எல்லாம் வலி..

அய்யோ கடவுளே!
எனக்கு ஏன் காதலை கொடுத்தாய்?

உருகி, உருகி ”இதுதான் காதல்” என்று நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நேற்று என்னை பரிசோதித்த மருத்துவரோ எனக்கு புற்றுநோய் வந்திருக்கிறது என்கிறார். நீங்களே சொல்லுங்கள் எனக்கு வந்திருப்பது காதலா? இல்லை புற்றுநோயா?

Sunday 29 March 2009

ஐயோ இசை ஜாம்பவான்களே.. எங்கியாய்ய போய்விட்டிர்கள்..?


ஐயோ இசை ஜாம்பவான்களே.. எங்கியாய்ய போய்விட்டிர்கள்..? அண்மையில் விஜயண்டோனி இசை அமைத்த பாடல் கேட்டநேர்தது ஒருமலை நேரம் பண்பலையை (fm redio) கேட்ட பாடல் என்ன கொடும சார். "ஆதீசுடி" படலை ரீமிக்ஸ் என்ற போர்வையில் நம்ம தமிழரின் மனத்தை கப்பலேற வைத்திருக்கிறார் விஜயண்டோனி இந்தமாதிரி பாடல்களை தடை செய்வேண்டும். இதை கண்டிக்கமாட்டர்களா? நாம் இசை ஜாம்பவான்களே..

Tuesday 24 March 2009

சிரிக்க...சிந்திக்க..!


"ஈழத்தமிழரின் எட்டப்பன்" எட்டப்பன் ௬ட்டம் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லை



இந்த மனித ஜென்மம் கடவுளையும். ஆயுதம் எந்த வைத்துவிட்டான்.



நான் ரெம்ப பிஸி ஆதனால இப்படி ஒரு ஐடியா.! எப்படி என்ன ஐடியா.?

குடிகார பயலுகளா..! எப்படி சொன்னாலும் திருந்தமாட்டிங்க. இதையும் பாருங்க..

திரையில் இடை பார்த்து அலுத்துப்போச்சு. அதுக்காகத்தான் இப்படி ஒரு இடை.
உங்க உலக நாட்டு சண்டைக்கு எங்கள எய்ய இழுகிறிங்க

ஜோ... ஜோ.. இது எங்கயடா வச்சு இருக்க?

fast food தான் கேள்வி பட்டதுண்டு ஆனா fast sleeping.

குரங்குக்கோ மனித குணம்.. மனிதருக்கோ குரங்குகுணம்...
ஐயா.. சாமி..! வந்திங்க பார்த்திங்க எதாவது கிறிக்கிட்டு போங்க சாமி. உங்களுக்கு புன்னியமபோகும்.
நன்றி மீண்டும் வருக.