Wednesday, 20 January 2010

விலைமாதர் கண்ணீர்





எல்லா சாதியம் தீண்டுகிற எச்சில் சாதி எங்கள் சாதி.!
எல்லா மதமும் கலக்கின்ற எங்கள் மதம் மன்மதம்.!

இனிப்பு கடை நாங்கள் எல்லோருக்கும் திண்பண்டம்.!
குனிந்து வருகிற நீதிபதி, குற்றவாளியும் அடுத்தபடி.!

“மேலும் படிக்க”


தனயன் நுழைய முன்வாசல்
தந்தை நழுவ பின்வாசல்.!
மூடாதிருக்கும் எப்போதுமே எங்கள் வாசல்.!

நித்தம் ஒரு கணவன் குறைவில்லை
நிரந்தர கணவன் வரவில்லை
புதுமணப் பெண்போல தினம் தோறும்
பொய்க்கு இளமை அலங்காரம்.!

தத்துவஞானிகள் மத்தியிலே தசையவதானம் புரிகிறோம்
உத்தமப்புத்திரர் பல பேருக்கு ஒருநாள் பத்தினி ஆகிறோம்.!

மேடையில் பெண்கள் விடுதலை பேசியபின் வந்து
மேதையும் எங்களை தொட்டனைப்பான்
நாங்கள் ஆடைகள் கட்ட நேரமின்றி ஆண்களை மாற்றிக்கட்டுகிறோம்.!

உப்பு விலைதான் எங்கள் கற்பு விலை
உலை வைக்கத்தான் இந்தநிலை.!
தப்புத்தான் விடமுடியவில்லை
தருமம் சோறு போடவில்லையே...!


உலகத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள் ஆனால் இவர்களின் மற்றம்??? எப்பொழுது ஒரு மனிதன் அன்புக்கு அடிமைப்படாமல் காமத்துக்கு அடிமைப்பட்டால் இது தொடர் கதைதான். இதை பார்த்துகொண்டு இருக்கும் இந்த நிமிடம் முதல் உலகத்தில் எங்கயோ ஒரு முலையில் இந்த சமூகத்தாலும், காம அரக்கர்களாலும் ஒரு விலைமாது உருவாகிக்கொண்டுதான் இருக்கிறாள். இந்த உலகத்தில் இதை மாற்று வதற்கும் வழியுண்டு அந்த முன்று எழுத்துக்களால் மட்டுமே இதை மாற்ற முடியும். "அன்பு"
ஒவ்வொரு உயிர் மேலயும் அன்பு செலுத்துவோம்.

உங்கள் கருத்துக்கள் எதிர்பார்கிறேன்..
உங்கள் கருத்துக்கள் தான் மலர் வளர்வதுக்கான உட்டச்சத்து.
நன்றி :கவிதைகள் தென்றல் வாரந்திர பத்திரிகை


No comments:

Post a Comment