Sunday, 29 March 2009

ஐயோ இசை ஜாம்பவான்களே.. எங்கியாய்ய போய்விட்டிர்கள்..?


ஐயோ இசை ஜாம்பவான்களே.. எங்கியாய்ய போய்விட்டிர்கள்..? அண்மையில் விஜயண்டோனி இசை அமைத்த பாடல் கேட்டநேர்தது ஒருமலை நேரம் பண்பலையை (fm redio) கேட்ட பாடல் என்ன கொடும சார். "ஆதீசுடி" படலை ரீமிக்ஸ் என்ற போர்வையில் நம்ம தமிழரின் மனத்தை கப்பலேற வைத்திருக்கிறார் விஜயண்டோனி இந்தமாதிரி பாடல்களை தடை செய்வேண்டும். இதை கண்டிக்கமாட்டர்களா? நாம் இசை ஜாம்பவான்களே..

Tuesday, 24 March 2009

சிரிக்க...சிந்திக்க..!


"ஈழத்தமிழரின் எட்டப்பன்" எட்டப்பன் ௬ட்டம் இருக்கும் வரை தமிழனுக்கு விடிவு இல்லைஇந்த மனித ஜென்மம் கடவுளையும். ஆயுதம் எந்த வைத்துவிட்டான்.நான் ரெம்ப பிஸி ஆதனால இப்படி ஒரு ஐடியா.! எப்படி என்ன ஐடியா.?

குடிகார பயலுகளா..! எப்படி சொன்னாலும் திருந்தமாட்டிங்க. இதையும் பாருங்க..

திரையில் இடை பார்த்து அலுத்துப்போச்சு. அதுக்காகத்தான் இப்படி ஒரு இடை.
உங்க உலக நாட்டு சண்டைக்கு எங்கள எய்ய இழுகிறிங்க

ஜோ... ஜோ.. இது எங்கயடா வச்சு இருக்க?

fast food தான் கேள்வி பட்டதுண்டு ஆனா fast sleeping.

குரங்குக்கோ மனித குணம்.. மனிதருக்கோ குரங்குகுணம்...
ஐயா.. சாமி..! வந்திங்க பார்த்திங்க எதாவது கிறிக்கிட்டு போங்க சாமி. உங்களுக்கு புன்னியமபோகும்.
நன்றி மீண்டும் வருக.

Sunday, 15 March 2009

ஒவ்வொரு தமிழனும். கேட்க்க வேண்டிய பேச்சு..!

ஒரு மொழி ஒரு இனத்தின் அடையாளம். அகவே..! தமிழரிடம் தமிழில் பேசுங்கள்.

முடிந்தால்..! உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
நன்றி மீண்டும் வருக.

Monday, 9 March 2009

அழகிப் போட்டிகள்


அழகு என்பது காண்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றொரு ஆங்கில சொல் உள்ளது. என் கண்களுக்கு அழகாகத் தெரிவது உங்கள் கண்ணுக்கு அப்படி தெரிய வேண்டிய அவசியமில்லை. எனக்கும் உங்களுக்கும் அழகாகத் தெரிவது அடுத்தவருக்கு அப்படி தோன்றுவது நிச்சயம் இல்லை ஒல்லியான உடல்வாக்கு, பருத்த உடல்வாக்கு, சிவந்த நிறம் பழுத்த நிறம் கருப்பு நிறம் உருண்டை முகம் தட்டை முகம் இதுபோன்று அநேக விஷயங்களில் அழகு குறித்து அளவீடுகள் ஆளாளுக்கு அவரவர் பார்வையில் மாறுபடுவது இயற்கை. இந்த நியதியை நிராகரித்து உலகம் முழுசுக்கும் அழகின் இலக்கணம் இவைதான் என்று இறுதி நியாயத்தை வரையருப்பவையே உலக அழகி போட்டிகள். அழகிப் போட்டிகளின் பின்னுள்ள, அரசியல், இவற்றின் சமூக, உளவியல் தாக்கங்கள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன்.

பிரபல பேச்சாளரும், நடிகருமான பெரியார்தாசன், கடந்த 20 ஆண்டுகளாக மனோதத்துவ சிகிச்சையாளராகவும், மனோதத்துவ ஆலோசகராகவும், பதிவு பெட்டு பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது இனி பெரியார்தாசன்...

அழகை ஆராதனை சேர்வது என்ன்ற விஷயம் மனிதகுலத்தில் காலங்காலமாக இருந்து வருவது தான். எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காக உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக பல செயல்கள் நடைபெறுவது தொன்றுதொட்டு நிலவும் வழக்கம் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கவர்வதற்காக தனிப்பட்டு நடைபெற்றுவந்த இம்மாதிரி காரியங்கள் நாளடைவில் மற்றவர்களையும் சந்தோசப்படுத்தும் விதமாக கலைவடிவம் பெற்றது. ஆதிவாசிகளின் நாட்டியம் தெருக்கூத்து, மேடை நாடகம் போன்ற வடிவங்களில் அழகு பரிமாற்றப்பட்டது.

இந்தக் கலை வடிவம் சினிமாவாகப் பரிணாமம் பெற்று பெருவாரியான மக்கள் கூட்டத்தைக் கவரத் தொடங்கிய பின்னர் இந்த "அழகுப் பரிமாற்றம்" என்பது பணக்காரர்களின் விளையாட்டாக மாறியது. அதாவது இதில் வணிகம் புகுந்து கொண்டது.

தெருக்கூத்தில் மகாராஜாவாக வேஷம் போடுபவர் அதிலே தன் திறமையைக் காட்டிவிட்டு பின்னர் துண்டேந்தி ஊர் வசூல் செய்து பிழைப்பு நடத்துவார். தானம் கொடுக்கிற மக்கள் வசதியாக வாழ்ந்தார்கள். சினிமாவில் இது உல்டாவானது! அங்கே ரசிகர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நடிகர் - நடிகைகள் வசதியில் கொழிக்கிறார்கள். ரசிகர்களோ வறுமையில் வாடுகிறார்கள். இந்த சினிமா தந்திரத்தை கவீகரித்க் கொண்ட பெரும் செல்வந்தர்கள் அழகிப் போட்டி என்ற ஐடியாவைக் கொண்டுவந்தார்கள். இந்த அழகிகள் வாயிலாக தங்கள் பொருட்களை விற்பனை செய்வது சுலபம் என்று கண்டு கொண்டார்கள்.

கடந்த 50,60 ஆண்டுகளாக இந்த உலக அழகி, பிரபஞ்ச அழகி கூத்தெல்லாம் நடைபெற்று வந்தாலும் கடந்த சுமார் 15 ஆண்டுகளில்தான் இந்தியப் பெண்களுக்கு இவற்றில் முதலிடமோ அல்லது இரண்டாம் இடமோ, முன்றாம் இடமோ கிடைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது அதாவது உலக மயமாக்கலுக்கு பிறகு ஆசியா கண்டத்தின் மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நாடாகிய இந்தியாவின் வணிகச் சந்தையை குறிவைத்து நடத்தும் நாடகம் இது.

உலக அழகி, பிரபஞ்ச அழகியவும் பட்டம் வென்ற இந்திய பெண்களைவைத்து விளம்பரம் செய்து தமது பொருட்களை இந்தியர்களின் தலையில் கட்டிவிடும் பன்னாட்டு நிறுவனங்களின் வியபர யுக்தி இதன் பின்னணியில் செயல்படுகிறது

சமூகத்தில் பெண்கள் மீதான இதன் தாக்கமும் கவனிப்பும் உரியது. இன்னன அளவுகளில்தான் அழகு என்ற அழகிப்போட்டி கருத்தாக்கத்தை நம்பும் பெண்கள் சிலர். தாங்களும் அதே அளவுகளைப் பெற விரும்பி உடல் இளைக்கும் பொருட்டு குறைவாக சாப்பிட்டும் பட்டினி கிடந்தும் உடல் நலத்தை கெடுத்து கொள்கிறார்கள்.

இதை விட மோசமானது உளவியல் தாக்கம். 32 28 32 என்னமோ அளவு சொல்கிறார்களே.. அந்த அளவி தனக்கு இல்லை என்பதாலும் அழககிப் போட்டிகளில் முன்னிறுத்தப்படும் சிவந்த நிறம் தனக்கு இல்லை என்பதாலும் தாழ்வுமனப்பான்மையில் புளுங்குகிற பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் மனச்சிதைவு நோய்க்கு (schizo phrenia) ஆளாகும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் ஏன் தான் அழகில்லை என்றுநினைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்களையும்
நானறிவேன். நம் மக்களுக்கு விழிப்புணர்வு வந்தாலொழிய இதற்கெல்லாம் விடிவில்லை" என்று பொரிந்து தள்ளினர் பெரியார்தாசன். இதுதான் அழகு என இலக்கணம் வகுக்க இவர்கள் யார்? கேக்குறவன் கேனையனா இருந்த ஐமமாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம். என்பது இதுதானோ.!!

நண்பர்களே..! உங்கள் கருத்து எழுதிற்று போங்க

Friday, 6 March 2009

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

நண்பர் அனுப்பிய மின்னஞலில் வந்த செய்தி நீங்களும் படிங்க..!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2. உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3. உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம் போட்டுகிட்டு இருப்பாங்க..!

4. வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5. எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6. மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப் பார்வையோடு..!

7. உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாம இருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8. சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம் கொண்டாடுவீங்க..!

9. ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ். அமிர்தா,சுகிர்தா..]

10. ஏ.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. ஏ.சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பை கீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11. விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12. புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட் பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்ட மறக்கவே மாட்டீங்க..!

13. செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14. அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாம இருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.... எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க.. ஆனா சொல்ல மாட்டீங்க..!

15. உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16. உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17. அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [உ-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர், வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18. பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி, போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19. கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20. இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..

இப்படி இருந்த கண்டிப்பா நீங்க தமிழர்தான்.


வந்திங்க படிச்சிங்க எதாவது எழுதிட்டு போங்க சாமி..!

Thursday, 5 March 2009

பாகிஸ்தானில் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை குறிவைத்தது யார்?


போர் தனித்து களமுனைகளில் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக களமுனை உருவாக்கங்களாலும் நிர்ணயிக்கப்படும் என்பதை லாகூரில் நடைபெற்ற சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீதான தாக்குதல் வெளிப்படுத்துகின்றது. இந்தப் பின்னணியில் நிலைமையை ஆராய்கின்றார் பா.மதியழகன்.
சுமார் மூன்று தசாப்த காலமாக இலங்கையில் நடைபெறுகின்ற போர், அனைத்துலக சக்திகளின் விளையாட்டு அரங்காக சிறிலங்காவையே மாற்றி விட்டது போன்ற செய்திகள் வெளிவருவது பலருக்கும் தெரிந்த விடயம்.

ஆனால், இன்னொரு நாட்டில் சிறிலங்காவை பந்தாகப் பாவிப்பார்கள் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள்?

நிச்சயமாக, இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோ (RAW) வை தவிர பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஓகஸ்ட் 14, 2006 இல் சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட் மீது கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலின் இலக்காக தூதுவரே இருந்தாலும் அவர் நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.

இந்தத் தாக்குதலில், சிறிலங்கா அதிரடிப்படையினர் நால்வர் உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதுடன் 17 பேர் காயமடைந்திருந்தனர்.

வழக்கம் போலவே, புலிகளே தாக்குதலுக்கான சூத்திரதாரிகள் என சிறிலங்கா அரசு குற்றம் சாட்டியது.

ஆனால், சிறிது காலத்திற்குப் பின்னர் சிறிலங்காவின் ஊடகவியலாளர் குழுவொன்று பாகிஸ்தானுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்து.

இந்த பயணத்தின் ஓர் அங்கமாக, சிறிலங்காவுக்கான பாகிஸ்தானிய தூதுவராக இருந்த பசீர் வலி முகமட்டையும் ஊடகவியலாளர்கள் சந்தித்திருந்தனர்.

இன்னொரு வகையில் கூறப்போனால், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பை பாகிஸ்தானிய புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ (ISI) திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தது.

ஏனெனில், கொழும்பில் பாகிஸ்தானிய தூதுவர் மீதான தாக்குதலின் பின்னணியில் றோவே இருந்தது என்பதற்கான போதிய ஆதாரங்களை ஐ.எஸ்.ஐ திரட்டியிருந்தது.

அதன் அடிப்படையிலேயே, குறித்த ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக தன்மீதான தாக்குதலுக்கு றோவே பின்னணியிலில் இருந்தது என்பதை திட்டவட்டமாக தெரிவித்திருந்த பசீர் வலி முகமட், விடுதலைப் புலிகளுக்கும் தன் மீதான தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்புமில்லை என வெளிப்படையாகத் தெரிவித்து, விடுதலைப் புலிகள் மீதான குற்றச்சாட்டை அடியோடு மறுத்திருந்தார்.

பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்குமான நெருக்கமான உறவின் உயிர்நாடியாக பசீர் வலி முகமட் விளங்கினார்.

இலங்கையில் பாகிஸ்தான் ஆழமாக காலூன்றுவது தனது தேசிய பாதுகாப்புக்கு குந்தகமாக அமையும் எனக் கருதிய இந்தியா, தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடக்கூடிய நடவடிக்கைகளின் ஆணிவேராகத் திகழ்ந்த பசீர் வலி முகமட்டை கொழும்பில் வைத்து தீர்த்துக்கட்ட முனைந்து தோல்வியடைந்தது.

இருப்பினும், தனது புலனாய்வுப் பணியை தொடர்ச்சியாக முனைப்படுத்தியது.

இலங்கையை பொறியாக வைத்து, பாகிஸ்தானை நெருக்கடிக்குள் தள்ளுவதன் ஊடாக பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவில் விரிசலை ஏற்படுத்தி, தனது கொல்லைப்புறத்தில் தனக்கு எதிரான சக்திகள் காலுன்றுவதை நிறுத்த முடியும் என 'றோ' திடமாக நம்புகிறது.

புடவை வியாபரிகள் போல வேடம் தரித்து, மட்டக்களப்பில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் உளவுத் தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த றோவின் இரு முகவர்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை 'றோ' சிறிலங்காவில் இறுக்கமாக்கியிருந்தது.

இருந்தபோதும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான இராஜதந்திர, இராணுவ உறவுகள் வலுப்பட்டனவே தவிர, வலிமை இழக்கவில்லை. இது றோவுக்கு கடும் எரிச்சலை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

அதேவேளையில், ஐ.எஸ்.ஐயின் பின்னுதவியுடன் பாகிஸ்தானை தளமாகக்கொண்ட லஸ்கார் - ஈ - தைபா என்ற தீவிரவாத அமைப்பு மும்பாய் மீது மேற்கொண்ட தாக்குதல் றோவுக்கு தலைகுனிவை மட்டுமல்ல, தடுமாற்றத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

குறிப்பாக, பெருமளவான அமெரிக்க, ஐரோப்பா சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டமை, அனைத்துலக ரீதியில் இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டு பண்ணியிருந்தது.

அதற்கு இராணுவ ரீதியில் பதிலடி கொடுப்பதற்கு இந்தியா திட்டமிட்டது. ஆனால், கொண்டலீசா றைசின் தலையீடு அதற்கு இடமளிக்கவில்லை.

ஆனால், தனக்கு ஏற்பட்ட தலைக்குனிவுக்கு எதிராக பழிவாங்குவதற்கு 'றோ' துடியாய் துடித்து தருணம் பார்த்திருந்தது.

இதேவேளை, சிறிலங்காவுக்கு தேவையான அனைத்து இராணுவ உதவிகளையும் தானே வழங்குவதனூடாக பாகிஸ்தானின் ஆதிக்கத்தை இலங்கையில் குறைக்கலாம் என செயற்பட்ட புதுடில்லிக்கு கடந்த பெப்ரவரி 27 ஆம் நாள் தொடங்கிய வெளிநாட்டு அமைச்சர்களின் 31 ஆவது சார்க் மாநாட்டில், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவுகள் மென்மேலும் வலுப்படத்தக்க வகையில் இணங்கப்பட்ட உடன்பாடுகள் கடும் விசனத்தையும், சினத்தையும் உண்டு பண்ணியிருந்தது.

அதன் காரணமாகவே, தமிழ்மக்களை கொன்றொழிப்பதற்கு முதுகெலும்பாக இருந்து வந்த காங்கிரஸ் விற்பன்னர்கள் திடீரென தமிழ்மக்கள் மீது அக்கறை உள்ளது போல் வெளிக்காட்ட முற்பட்டார்கள்.

கடந்த ஜனவரி 28 ஆம் நாள் மகிந்த ராஜபக்சவுடனாக சந்திப்பைத் தொடர்ந்து இராணுவ வெற்றிகள் அரசியல் தீர்வுக்கு வழிகோலுவதோடு, வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலை தோன்றுவதற்கு அடிப்படையாகும் என்ற சாரப்பட கருத்து தெரிவித்த இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சரியாக ஒரு மாதம் கழிந்த நிலையில், தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றி, புலிகள் அறிவித்துள்ள போர் நிறுத்த வாய்ப்பை சிறிலங்கா அரசாங்கம் சரிவரப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

பிரணாப் முகர்ஜியின் கருத்து என்பது, சிறிலங்கா தொடர்பான காய்நகர்த்தலில் 'றோ' மீண்டும் ஒருதடவை தோற்றுப் போனது என்ற கருத்தின் மறுவடிவம் எனக் கொள்ளலாம்.

இதுவும், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தக்கூடிய வகையில், லாகூரில் சிறிலங்கா துடுப்பாட்ட அணி மீது தாக்குதலை நடத்துவதற்கு 'றோ' திட்டமிட்டமைக்கான பிரதான காரணம்.

அத்துடன், தம்புள்ளையில் நடைபெற்ற போட்டிகளின் போது, இந்திய துடுப்பாட்ட அணி; சிங்கள காடையர்களின் கல்லெறிக்கு தொடர்ச்சியாக இருமுறை உட்பட்டது.

இது, தனது நாட்டு அணியினருக்கு சிறிலங்கா உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்ற மனோபாவத்தை புதுடில்லி அதிகார வர்க்கத்தினருக்கு உண்டு பண்ணியிருந்ததாக அறிய முடிகிறது.

அது மட்டுமன்றி, இந்திய அணி பாகிஸ்தானில் விளையாட மறுத்ததற்கு பதிலாகவே, சிறிலங்கா அணி குறித்த ஆட்டங்களில் பங்குபற்றுவதற்கு ஒப்புதல் அளித்தது.

இவையும், றோவின் தரவு சேகரிப்பு கோவைகளில் துணைக்காரணிகளாக அடையாளமிடப்பட்டிருக்கக்கூடிய வாய்ப்பு பெருமளவில் உள்ளது.

இவை அனைத்தையும் தாண்டிய உச்சக் காரணியாக, அனைத்துலக மட்டத்தில் பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத நாடாக வெளிப்படுத்துவதற்கு, உலகளாவிய ரீதியல் அனுதாபத்தை ஈட்டக்கூடிய ஒரு தாக்குதல் அவசியம் என திட்டமிட்ட 'றோ', அதற்கான மிகச்சிறந்த இலக்காக சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தெரிவு செய்தது.

இதன் ஊடாக ஒரே கல்லில் இரு மாங்காயை உடைத்துள்ளது.

அதேவேளை, இந்தப் பழியையும் புலிகள் மீது போடக்கூடிய கைங்கரியங்களில் 'றோ' ஈடுபடத் தொடங்கிவிட்டது.

ஆனால், பாகிஸ்தானுக்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பிணைப்பை விரும்பாத எதிரிகளே லாகூர் தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

அவதானங்களை கோர்வையாக்குகின்ற வாசகர்களுக்கு லாகூர் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது தற்போது தெளிவாக புரிந்திருக்கும்.


நன்றி
புதினம்.காம்

விஜய் பற்றிய ஜோக்

நாம் தகவல் தொழில் நுட்பத்தில் மிகுந்த தன்னிறைவு நாம் அடைந்து விட்டோம் இப்போதெல்லாம் போஸ்ட்டுகார்டுகளையோ வாழ்த்து அட்டைகளையோ காண முடிவதில்லை எல்லாவற்றிர்க்கும் செவ் போன் குறுந்தகவல் மெயில் என்று பல பரிணாமங்களை அடைந்து விட்டோம்.

தினமும் என் கைபேசிக்கு எதாவது தகவல்கள் தினமும் வந்து கொண்டே இருக்கின்றன நான் ரசித்த தகவல் என்ற லேபிளில் சில வற்றைஉங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன் ரசித்து பாராட்டுவீர் என்ற நம்பிக்கையுடன்.....இனி ஜோக்.நிருபர் / மிஸ்டர் விஜய் நீங்க உங்க ஒவ்வொறு படம் முடிஞ்ச மறுநாள் காலையில என்ன செய்விங்க...

நடிகர் விஜய்/ நேரா சர்ச்சுக்கு போய் பாவ மன்னிப்பு கேட்பேன்.


நிருபர் / சமீபத்தில் நீங்கள் உங்களுக்கு உள்ளே அல்லது மனசுக்குள் சிரிச்ச சம்பவம்னு எதை சொல்லுவிங்க...


நடிகர் விஜய்/ சத்தியம் தியேட்டர் வாசல்ல குருவி படத்தோடபேனர்ல வெற்றிகரமான 175வது நாள் போட்டு இருந்தது .எனக்கே சிரிப்ப அடக்க முடியலைன்னா பார்த்து கோங்கன்னா....ஒரு சர்தார்ஜி ரோட்டடுல நடந்து போய்க்குனு இருக்கறப்ப ஒரு காக்கா அவர் தலையில கக்கா போயிடுச்சி சார்தார்ஜி அந்த காக்காகிட்ட ஏன் சனியன்களா நீங்க எல்லாம் ஜட்டி போடவே மாட்டிங்களான்னு கேட்டார்.

அதுக்கு அந்த காக்கா சொல்லிச்சு என்டா கொய்யால .....
நீங்க எல்லாம் ஜட்டியில்தான் ஆய் போவிங்களாடா?ன்னு கேட்டுச்சு....

Monday, 2 March 2009

வணக்கம் நண்பர்களே..


பிளாக்கர்ல் என்னுடைய புலம்பல்களை பதியவந்திருகிறேன்.. உங்களுக்கு நேரம் இருந்தால் என்னுடைய புலம்பல்களையும் பார்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன்

நன்றி
மலர்

விரைவில்..
எனது புலம்பல்கள் ஆரம்பம்..