Tuesday, 9 February 2010

ஆண் + பெண் = காதல்(ர்)தினம் February 14

"காதல்"என்றால் என்ன?? நம்ம கவிஞர்கள் எல்லாம் காதலை பற்றி சொல்லி எப்படியோ நம்ம காதில பூ..... இதைதான் என் நண்பனிடமும் கேட்டேன். மச்சான் காதலென்றால் என்ன?? அது உயிர் இல்லாதது! உடல் இல்லாதது! அது இரு மனம் சம்மந்தப்பட்டது! ஓஹ அப்படி என்றால் ஏன் அது இளம் பருவத்தினரிடையே வருகிறது..! ஏன் அது உடல் சம்மந்தப்பட்டதா? அல்லது உணர்வு சம்மந்தப்பட்டதா? இதுக்கு நண்பனிடமும் பதில் இல்லை. என்னிடமும் பதில் இல்லை. வாசகர்களே... உங்களுக்கு தெரியுமா? தயவு செய்து தெரிந்தால் சொல்லுங்கள்!

இப்போதுள்ள காலத்தில் கடவுளைக் கூட கண்டுபிடித்துவிடலாம் காதலை கண்டுபிடிப்பதுதான் கடினமாக இருக்கிறது.. ஏன் என்றால் இப்போதுள்ள பெண்களிடம்( மன்னிக்கணும் பெண்களை மட்டும் உதரணத்துக்கு எடுத்து கொண்டதற்கு.. ஆண்களும் கூட உண்டு.) "வெயிட்டன பார்ட்டியா"னு பார்த்துத்தான் காதலே வருதாம். சரி விசயத்துக்கு வருவோம்


“மேலும் படிக்க”

காதல் என்றால் அன்பு. (நான் சொல்றது சரிதானே..!) அப்படி என்றால் காதலுக்கு விசேட நாள் தேவை தானா? february-14 "காதலர் தினம்" 'காதலிக்கும் கன்றாவிகளே '..வருடத்தின் 365 நாளும் அவனிடமோ! அவளிடமோ! காதலை(அன்பு) வெளிப்படுத்திரிங்க அப்படி என்றால் எதுக்கு உங்களுக்கு காதலர் தினம்.? ஒரு பெண்ணிடமோ அல்லது ஆணிடமோ உண்மையான அன்பாக இருந்தால் 365 நாளும் காதலர் தினமே...

நீங்கள் ஒரு பெண்ணை காதலிக்கும் நபரா.. அப்படினால் பெண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்.

  • நீங்கள் நல்லவரா? கெட்டவரா? அது முக்கியம் இல்லை. உங்களிடம் விலை உயர்ந்த கை பேசி (Cell phone)IPhone இருத்தல் வேண்டும்.
  • உங்களுக்கு சொந்தமான வாகன (van,car, ect..)வசதி இருத்தல் வேண்டும்.
  • வங்கி கணக்கு Fixed deposit, or current account, or saving accountஇருத்தல் வேண்டும் கண்டிப்பாக ATM card இருத்தல் வேண்டும் போனசாக Cradit card இருத்தல் நல்லது.
  • விதம் விதமாய் her style, dress அலங்காரம் பன்னுபவராக இருத்தல் வேண்டும்.
  • கையில் ஒரு தங்க மோதிரம், கழுத்தில் ஒரு வெள்ளி சங்கிலி இருத்தல் வேண்டும். (கவரிங்காக இருந்தாலும் பிரச்சனை இல்லை பார்ப்பதற்கு தங்கம், வெள்ளியாக ஜோளித்தல் வேண்டும்.)
  • மேலே சொன்ன எதுவுமே இல்லையா கவலைய விடுங்க நீங்கள் எதாவது ஒரு மேலைத்தேய நாடொன்றில் இருந்தாலே போதும் நீங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை அழகு,அறிவு இல்லாடியும் பிரச்சனை இல்லை. (இது மேலைத்தேய கலாச்சாரத்துக்கு ஆசைபடும் பெண்களுக்கு மட்டும்)
  • கஞ்ச்சதனம் இருக்கவே இருக்ககூடாது.


    நீங்கள் ஒரு ஆண் மகனை காதலிக்கும் நபரா அப்படினால் ஆண்கள் உங்களிடம் எதிர்பார்க்கும் தகுதிகள்.

  • அதிகம் குண்டாகவும் இல்லாமல் அதிகம் மெலிந்த தேகமும் இல்லாமல் இருத்தல் வேண்டும்.
  • கண்டிப்பாக உங்களுக்கு "தங்கை" இருத்தல் வேண்டும்
  • Modern girl இருத்தல் வேண்டும் (ஒரு சில ஆண்களுக்கு மட்டும்)
  • அப்பா நல்ல வசதி வாய்ப்புகளோடு இருத்தல் வேண்டும்.
  • மேலே சொன்ன எதுவுமே இல்லையா அப்படியானால் கவலையை விடுங்க அழகும், அறிவும் நிறைந்த குடும்ப விளக்காக இருந்தாலே போதும்.

    குறிப்பு: இது சும்மா டைம் பாஸ்க்கு எழுதியது

No comments:

Post a Comment