மழை பற்றி நா.முத்துகுமார்...

மழை ஒரு காதலி
வருவதாய் காக்க வைத்து
வராமலே போகிறது!
மழை ஒரு கன்னிப்பெண்
அழும்போதும்
அழகாக இருக்கிறது!
மழை ஒரு குழந்தை
கையில் கிடைத்தவற்றைக்
கிழித்து வீசுகிறது!
“மேலும் படிக்க”
மழை ஒரு அரசியல்வாதி
எப்போதாவது ஒரு முறைதான்
தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்கிறது!
மழை ஒரு குடிகாரன்
தண்ணி அடித்துக்கொண்டே
தரைமேல் விழுகிறது
மழை ஒரு ஊதாரி
கிறுக்குப்பிடித்து
கடலில் விழுகிறது!
மழை
நீர் தெளித்து
மனிதர்களைத்
தூமைப்படுதுகிறது!
மனிதர்கள்
குடைப்பிடித்து
மழையை
அசுத்தப்படுத்துகிறார்கள்!
மழை
ஒழுகி, பாத்திரங்களில்
ஜலதரங்கம் வாசிக்கும்!
மழையை ஜன்னலில்
இருந்து பார்க்காதே...
ஜன்னலை மழையில் இருந்து பார்!!
மனிதர்கள்
ReplyDeleteகுடைப்பிடித்து
மழையை
அசுத்தப்படுத்துகிறார்கள்!
மழை
ஒழுகி, பாத்திரங்களில்
ஜலதரங்கம் வாசிக்கும்!
மழையை ஜன்னலில்
இருந்து பார்க்காதே...
ஜன்னலை மழையில் இருந்து பார்!! ]]
இவை மிகச்சிறப்பு
(சுட்டி தந்த கடல்புறா பாலாவுக்கு நன்றி.)
வரவுக்கு நன்றி ஜமால்.! மீண்டும் வருக..
ReplyDeleteநன்றி.. நன்றி.. நன்றி... அண்ணாமலையான். வரவுக்கும்,அன்பான வாழ்த்துக்கும்
ReplyDelete