Monday 30 November 2009

உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை (தமிழீழம்) மறக்கலாமா?

இந்த பாடலைப் பாருங்கள் நண்பர்களே.. இந்த சமயத்தில் ஒவ்வொரு தமிழனும் பார்க்கவேண்டிய கருத்துள்ள பாடல்.




உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா?

யுத்தங்கள் தோன்றட்டும் இரத்தங்கள் சிந்தட்டும் பாதை மாறலாமா?

இரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும் கொள்கை மாறலாமா?

இப்பாடல்
பாதை மாறும் தமிழனுக்கு சமர்ப்பணம்.

Sunday 15 November 2009

உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் இவர்களுக்கு சொல்ல போகிற பதில் என்ன?


கார்த்திகை 27. தமிழர்களின் புனித நாள். தமிழர்களை உலக அரங்கில் தலை நிமிரவைத்த கதாநாயகர்கள். தமிழர்களுக்கு ஒளியை தந்துவிட்டு இவர்கள் ஒளியை அனைத்துகொண்டவர்கள். இவர்களின் கேள்விகளுக்கு உங்கள் மனசாட்சியில் இருந்து என்ன பதில் சொல்லபோறிங்க? இவர்களுக்கு உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் பதில் சொல்லணும். தமிழர்களே.. இவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்கள் உங்கள் ஒவ்வொரு மனதிலும். போர்க்களம் மாறலாம் போர்கள்தான் மாறுமா? இவர்கள் இட்ட தீ என்றும் எம் மனதில் எரிமலையாக.. உங்கள் நினைவுகளோடு விரைவில் எங்கள் விடுதலையை வென்றெடுப்போம்.

இந்த நேரத்தில எங்கயோ பார்த்த கவிதைதான் ஞாபகத்திற்கு வருது

மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனன்
அனைவரும் கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

"புன்னகை" கவிதை இதழில் இருந்து