Thursday 29 April 2010

பாரதிதாசன்



இன்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் 119 பிறந்த தினம்.

புரட்சிகவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல் புதுவையில் பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு பிறந்தார். கவிஞரின் இயற் பெயர் சுப்புரத்தினம். 1920 ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பாரை மணந்து கொண்டார்.

இவர் சிறுவயதிலேயே பிரெஞ்சு மொழிப் பள்ளியில் பயின்றார். ஆயினும் தமிழ்ப் பள்ளியிலேயே பயின்ற காலமே கூடியது. தமது பதினாறாம் வயதிலியே கல்வே கல்லூரியில் தமிழ்ப் புலமைத் தேர்வு கருதிப் புகுந்தார். தமிழ்ப் மொழிப் பற்றும் முயற்சியால் தமழறிவும் நிறைந்தவராதலின் இரண்டாண்டில் கல்லுரியிலேயே முதலாவதாகத் தேர்வுற்றார். பதினெட்டு வயதிலேயே அவரின் சிறப்புணர்ந்த அரசியலார் அவரை அரசினார் கல்லூரித் தமிழாசிரியாரானார்.

Wednesday 21 April 2010

உங்கள் வயது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த நொடியுடன் உங்கள் வயது என்ன தெரியுமா?

உங்கள் வயது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இந்த நொடியுடன் உங்கள் வயது எத்தனை ஆண்டுகளும், எத்தனை மாதங்களும், எத்தனை நாட்களும், எத்தனை மணித்தியாளங்களும், எத்தனை நிமிடங்களும், நொடிகளும் ஆகின்றன என்பதை உடனடியாகக் கூற முடியாது.

இதோ கீழுள்ள வயது புள்ளி விபரக் கணிப்பானிடம் உங்கள் பிறந்தத் திகதி, நேரத்தை கொடுத்தீர்களானால். புள்ளி விபரங்களை அறிந்துகொள்ளலாம்.




”நேரமும், காலம்....!! விலைக்குக் கிட்டாது! விரும்பியும் திரும்பாது.

Tuesday 6 April 2010

மழை..!!

மழை சில குறிப்புகள்....
மழை பற்றி நா.முத்துகுமார்...




மழை ஒரு காதலி
வருவதாய் காக்க வைத்து
வராமலே போகிறது!

மழை ஒரு கன்னிப்பெண்
அழும்போதும்
அழகாக இருக்கிறது!

மழை ஒரு குழந்தை
கையில் கிடைத்தவற்றைக்
கிழித்து வீசுகிறது!


“மேலும் படிக்க”

மழை ஒரு அரசியல்வாதி
எப்போதாவது ஒரு முறைதான்
தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்கிறது!

மழை ஒரு குடிகாரன்
தண்ணி அடித்துக்கொண்டே
தரைமேல் விழுகிறது

மழை ஒரு ஊதாரி
கிறுக்குப்பிடித்து
கடலில் விழுகிறது!

மழை
நீர் தெளித்து
மனிதர்களைத்
தூமைப்படுதுகிறது!

மனிதர்கள்
குடைப்பிடித்து
மழையை
அசுத்தப்படுத்துகிறார்கள்!

மழை
ஒழுகி, பாத்திரங்களில்
ஜலதரங்கம் வாசிக்கும்!

மழையை ஜன்னலில்
இருந்து பார்க்காதே...
ஜன்னலை மழையில் இருந்து பார்!!