Tuesday, 2 February 2010

இப்படியும் நடக்குதுங்கோ இங்க..


தி கிரேட் மலேசியா. ஆசியா நாடுளில் வளர்ந்துவரும் நாடுகளில் மிக முக்கியம் வாய்ந்த நாடு. அப்படி இருக்கையில் நாட்டின் முதுகெலும்பே இளைஞர்கள்தான். அதில் எந்தமாற்றமும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது ஒரு சில ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்படும் இளைஞர்கள். சிலர் இப்படியும் நடந்து கொள்கிறார்கள் அண்மையில் இங்கு நடந்த ஒரு உண்மைச்சம்பவம். இதைப் படிக்கும் உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞகளை நினைக்கையில் உங்களுக்கு என்ன தோன்னுது....... நாட்டில் இளைஞர்களை கூலிப்படைகளாக பயன் படுத்தி கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து இருப்பதால் பெண்கள் தனியாக நடந்து செல்லவே பயப்படுகிறார்கள். சில வழிப்பறி சம்பவங்களால் மரணச் சம்பவங்களும் நடந்தது உண்டு.

“மேலும் படிக்க”

பெண்கள் கழுத்தில் சங்கிலியோ, தலிக்கொடியோ அணிந்து கொண்டு நடமாட முடிவதில்லை. நாள் தோறும் எதாவது ஒரு சம்பவம் நடந்து கொண்டே தான் இருக்கிறது அண்மையில் வேலை முடிந்து வீடு செல்ல விருப்பிய ஒரு குடும்ப பெண். தன் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை தனது கைப்பையில் பத்திரபடுத்திக் கொண்டு அதற்கு பதிலாக ஒரு மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொண்டு சென்றார்.

சாலையில் அப் பெண்மணி செல்லும் பொது மோட்டார் சைக்கிளில் வந்த இரு கொள்ளையர்களில் பின்னல் இருந்த ஒருவன் மஞ்சள் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்றான். சிறிது துராம் சென்ற பிறகு அந்த மஞ்சள் கயிற்றை பார்த்த அவன் மீண்டும் அந்த பெண்மணியிடமே திரும்பி வந்தான். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அப்பெண்ணுக்கு அந்த மஞ்சள் கயிற்றை கட்டி இனிமேல் உனக்கு நான் தாண்டி புருஷன் என்றானாம்.

அந்த மஞ்சள் கயிற்றில் மஞ்சள் துண்டுதான் இருந்தது. பெண்கள் அணியும் மஞ்சள் கயிற்றில் தங்கம் அணிந்திருப்பார்கள். அப்படி எதிர்பார்த்த அந்த வழிப்பறி திருடனுக்கு ஒன்றும் அகபடாததால் ஆத்திரத்தில் மஞ்சள் கயிற்றை கட்டிச் சென்றான்.

தனியாக செல்லும் பெண்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். இப்படியும் சில வழிப்பறி திருடர்கள் நடமாடுகிறார்கள்.

No comments:

Post a Comment