Saturday 12 December 2009

2010ற்கான நோபல் விருது மஹிந்தவிற்கா??


இந்தவருட நோபல் விருது அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு வழங்கப்பட்டுள்ளது இது சரிதானா? உலகத்தில அமைதியை உண்டுபன்னுவம் உண்டுபன்னுவம் என்று சொல்லியே உலக அமைதியை கெடுப்பதும் அமெரிக்கதானே? தானும் நல்லா இருக்ககூடாது மற்றவனும் நல்ல இருக்ககூடாது இதுதானே அமெரிக்கவின் வெளிவுரவுக் கொள்கை. அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் விருது வாங்கியது தவறு என்று சொல்லவரவில்லை. அதிபர் ஒபாமா நோபல் விருது வாங்குவதற்கு இன்னும் நேரகாலம் இருக்கு. இந்த விருது அறிவிக்கும் பொழுதே 3000 துருப்புக்கள் தலிபான்களுடன் சண்டை போடுவதற்கு சென்றுள்ளனர். இப்படி இருக்கும் பொழுது அதிபர் ஒபாமா நோபல் விருது வழங்கியது சரிதானா? நோபல் விருது தேர்வு குழு என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் விருதுக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் சாதாரண வாசகன் என்றவிதத்தில் என் கேள்வி இது? இப்படி இருந்தால் அடுத்தவருடம் உலக சமாதானத்துக்கு பாடுபட்டவர் என்ற பெயரில் மஹிந்தவிற்கோ அல்லது சரத் பொன்சேகவிற்கோ வழங்கப்பட்டாலும் ஆச்சரிய படுறதுக்கு ஒன்றும் இல்லை.

No comments:

Post a Comment