Saturday, 24 October 2009

மலேசியாவில் ஈழ அகதிகளின் நிலை...




மலேசியாவில் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுள்ள இலங்கை அகதிகள் 98 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வரவேற்கத்தக்கவை இருந்தாலும் அகதிகள் அடையாள அட்டை வைத்திருந்தும் கைதுசெய்வது தவறே.. இங்குள்ள அகதிகளுக்கு அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் கடமை. கல்வி, மருத்துவம் போன்றவை மறுக்கபடுகின்றன இங்கு உள்ள குழந்தைகளின் எதிர்காலம் ?? கிட்டதட்ட 4000 பேர் அகதிகளாக ஐக்கிய நாடுகள் சபையில் பதிவுசெய்துள்ளனர். இவர்களுக்கான உரிமைகள் மறுக்கபடுவதலே இதற்கு மாற்று வழியாக உயிரை பணயம் வைத்து கடல் கடந்து செல்கிறார்கள்.


நாட்டிலும் வாழமுடியாமல் வந்த இடத்திலும் நிம்மதியாக வாழமுடியாமல் ரெண்டும் கேட்ட நிலைமை. இவர்களின் நிலைமைகளை மாற்ற போகிறவர்கள் யார்? உலக நாடுகளோ புத்தரின் கொள்கையிலே இருக்கிறது. (கண்களைமுடி தியானத்தில்...) இங்குள்ள ஒருசிலர் உதவி என்ற பேரில் RM40க்கு௦ அத்தியாவசிய பொருட்களை கொடுத்துவிட்டு RM400க்கு௦௦ விளம்பரம் தேடிக்கொள்கிறார்கள் இவர்களுக்கு தேவை அத்தியாவசிய பொருட்கள் இல்லை அகதிகளுக்கான அடிப்படை உரிமையே..! நீங்கள் நாடோடிகளை பார்த்ததுண்டா? இல்லையென்றால் மலேசியாவில் உள்ள அகதிகளை வந்து பாருங்கள் இவர்களின் நிலைமையும் இதுவே.. இவர்களின் எதிர்காலம் இப்படியே போய்விடுமா? கடவுளும் காலமும் தான் பதில் சொல்லும்.

கதறல்களும் கருத்துகளும் தொடரும்...

மேலும்.. மேலும்.. எழுதுவதற்கு.. உங்கள் கருத்துகளும் ஆலோசனைகளும் தேவை.

நன்றி
இவர்களில் ஒருவன்.

No comments:

Post a Comment