Monday, 9 March 2009

அழகிப் போட்டிகள்


அழகு என்பது காண்பவரின் கண்ணோட்டத்தைப் பொறுத்தது என்றொரு ஆங்கில சொல் உள்ளது. என் கண்களுக்கு அழகாகத் தெரிவது உங்கள் கண்ணுக்கு அப்படி தெரிய வேண்டிய அவசியமில்லை. எனக்கும் உங்களுக்கும் அழகாகத் தெரிவது அடுத்தவருக்கு அப்படி தோன்றுவது நிச்சயம் இல்லை ஒல்லியான உடல்வாக்கு, பருத்த உடல்வாக்கு, சிவந்த நிறம் பழுத்த நிறம் கருப்பு நிறம் உருண்டை முகம் தட்டை முகம் இதுபோன்று அநேக விஷயங்களில் அழகு குறித்து அளவீடுகள் ஆளாளுக்கு அவரவர் பார்வையில் மாறுபடுவது இயற்கை. இந்த நியதியை நிராகரித்து உலகம் முழுசுக்கும் அழகின் இலக்கணம் இவைதான் என்று இறுதி நியாயத்தை வரையருப்பவையே உலக அழகி போட்டிகள். அழகிப் போட்டிகளின் பின்னுள்ள, அரசியல், இவற்றின் சமூக, உளவியல் தாக்கங்கள் குறித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் பெரியார்தாசன்.

பிரபல பேச்சாளரும், நடிகருமான பெரியார்தாசன், கடந்த 20 ஆண்டுகளாக மனோதத்துவ சிகிச்சையாளராகவும், மனோதத்துவ ஆலோசகராகவும், பதிவு பெட்டு பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது இனி பெரியார்தாசன்...

அழகை ஆராதனை சேர்வது என்ன்ற விஷயம் மனிதகுலத்தில் காலங்காலமாக இருந்து வருவது தான். எதிர் பாலினத்தை ஈர்ப்பதற்காக உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக பல செயல்கள் நடைபெறுவது தொன்றுதொட்டு நிலவும் வழக்கம் ஆணும் பெண்ணும் பரஸ்பரம் ஒருவரையொருவர் கவர்வதற்காக தனிப்பட்டு நடைபெற்றுவந்த இம்மாதிரி காரியங்கள் நாளடைவில் மற்றவர்களையும் சந்தோசப்படுத்தும் விதமாக கலைவடிவம் பெற்றது. ஆதிவாசிகளின் நாட்டியம் தெருக்கூத்து, மேடை நாடகம் போன்ற வடிவங்களில் அழகு பரிமாற்றப்பட்டது.

இந்தக் கலை வடிவம் சினிமாவாகப் பரிணாமம் பெற்று பெருவாரியான மக்கள் கூட்டத்தைக் கவரத் தொடங்கிய பின்னர் இந்த "அழகுப் பரிமாற்றம்" என்பது பணக்காரர்களின் விளையாட்டாக மாறியது. அதாவது இதில் வணிகம் புகுந்து கொண்டது.

தெருக்கூத்தில் மகாராஜாவாக வேஷம் போடுபவர் அதிலே தன் திறமையைக் காட்டிவிட்டு பின்னர் துண்டேந்தி ஊர் வசூல் செய்து பிழைப்பு நடத்துவார். தானம் கொடுக்கிற மக்கள் வசதியாக வாழ்ந்தார்கள். சினிமாவில் இது உல்டாவானது! அங்கே ரசிகர்கள் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நடிகர் - நடிகைகள் வசதியில் கொழிக்கிறார்கள். ரசிகர்களோ வறுமையில் வாடுகிறார்கள். இந்த சினிமா தந்திரத்தை கவீகரித்க் கொண்ட பெரும் செல்வந்தர்கள் அழகிப் போட்டி என்ற ஐடியாவைக் கொண்டுவந்தார்கள். இந்த அழகிகள் வாயிலாக தங்கள் பொருட்களை விற்பனை செய்வது சுலபம் என்று கண்டு கொண்டார்கள்.

கடந்த 50,60 ஆண்டுகளாக இந்த உலக அழகி, பிரபஞ்ச அழகி கூத்தெல்லாம் நடைபெற்று வந்தாலும் கடந்த சுமார் 15 ஆண்டுகளில்தான் இந்தியப் பெண்களுக்கு இவற்றில் முதலிடமோ அல்லது இரண்டாம் இடமோ, முன்றாம் இடமோ கிடைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது அதாவது உலக மயமாக்கலுக்கு பிறகு ஆசியா கண்டத்தின் மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நாடாகிய இந்தியாவின் வணிகச் சந்தையை குறிவைத்து நடத்தும் நாடகம் இது.

உலக அழகி, பிரபஞ்ச அழகியவும் பட்டம் வென்ற இந்திய பெண்களைவைத்து விளம்பரம் செய்து தமது பொருட்களை இந்தியர்களின் தலையில் கட்டிவிடும் பன்னாட்டு நிறுவனங்களின் வியபர யுக்தி இதன் பின்னணியில் செயல்படுகிறது

சமூகத்தில் பெண்கள் மீதான இதன் தாக்கமும் கவனிப்பும் உரியது. இன்னன அளவுகளில்தான் அழகு என்ற அழகிப்போட்டி கருத்தாக்கத்தை நம்பும் பெண்கள் சிலர். தாங்களும் அதே அளவுகளைப் பெற விரும்பி உடல் இளைக்கும் பொருட்டு குறைவாக சாப்பிட்டும் பட்டினி கிடந்தும் உடல் நலத்தை கெடுத்து கொள்கிறார்கள்.

இதை விட மோசமானது உளவியல் தாக்கம். 32 28 32 என்னமோ அளவு சொல்கிறார்களே.. அந்த அளவி தனக்கு இல்லை என்பதாலும் அழககிப் போட்டிகளில் முன்னிறுத்தப்படும் சிவந்த நிறம் தனக்கு இல்லை என்பதாலும் தாழ்வுமனப்பான்மையில் புளுங்குகிற பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் மனச்சிதைவு நோய்க்கு (schizo phrenia) ஆளாகும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் ஏன் தான் அழகில்லை என்றுநினைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்களையும்
நானறிவேன். நம் மக்களுக்கு விழிப்புணர்வு வந்தாலொழிய இதற்கெல்லாம் விடிவில்லை" என்று பொரிந்து தள்ளினர் பெரியார்தாசன். இதுதான் அழகு என இலக்கணம் வகுக்க இவர்கள் யார்? கேக்குறவன் கேனையனா இருந்த ஐமமாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம். என்பது இதுதானோ.!!

நண்பர்களே..! உங்கள் கருத்து எழுதிற்று போங்க

No comments:

Post a Comment