Friday 2 September 2011

ஒரு விபச்சாரியின் கல்லறை வாசகம்






உன் பசிக்கு தீனி போட்டு
என் பசி போக்கினேன் 
இன்று உடல் பசியுமில்லை 
உணவுப் பசியுமில்லை 
நிம்மதியாய் தூங்குகிறேன்.!

 “மேலும் படிக்க”



மர்ம நோயினால் 
இளவயதிலே இறந்துவிட்டேன் 
மனிதர்களே எச்சரிக்கையாயிருங்கள்.!

உடல் தின்னும் மனித கழுகுகளே 
சிக்கித் தவிக்கும் மாந்தர்களே 
எல்லோரும் வாருங்கள் 
இங்கே நிம்மதியாய் உறங்கலாம்.!

விபச்சாரி என்று சொல்லாதீர்கள் 
இனி என்னால் விலைபோக முடியாது.!

என் கல்லறை வாசலில் 
அலங்கரிக்கும் கடைசி பூக்களையாவது 
கசக்காமல் வைத்துவிட்டுப் போங்கள்.!

இறந்தும் என்னை 
ருசிக்க கதவு தட்டுகிறது 
கறையான்கள்.!

மானிடா இளமையை 
நீ அனுபவித்தாய் 
முதுமையை என்னை 
சுமக்கும் மண் அனுபவிக்கிறது.! 

நாளாந்தம் என்னை 
நாடி வந்தவர்கள் தூரத்தில் 
விலகி நின்றார்கள் 
எனக்கென என்னுடன் 
கடைசிவரை என்னுடல் மட்டுமே.!! 


இங்கே கதவு மூடப்படுகிறது 
வாடிக்கையாளர்களே 
இனி தட்டாதீர்கள் கதவை 

காணிக்கையாய் பலருக்கு 
கதவினைத் திறந்து வைத்தேன் 
இன்று கண்ணீர் காணிக்கைக்கு கூட யாருமில்லை    


:நன்றி: 
மித்திரன் 

2 comments:

  1. உரக்கச்சொல்லிட நினைத்த விஷயங்கள்.. உலர்ந்துவிட்டதனால் ஒத்துழைக்காத நாக்கு ஒடுங்கியடங்கினாலும்.. சாத்தப்பட்ட கதவின் ஒலி ஒரு சில மனங்களையாவது தட்டட்டும்.

    ReplyDelete
  2. நிரந்தர உறக்கத்தில் நீ புலம்பலம்புவது கேட்க்குமா இங்குள்ள கயவர்களுக்கு?

    ReplyDelete