Wednesday 23 June 2010

உலகுக்கு கேட்கட்டும். ஊமைகள் பேசுவது..!! பர்மாவில்(myanmar) இருந்து ஒரு குரல்.!!

      ஆசிய நாடுகளில் மட்டுமின்றி, பர்மாவின் புகழ் உலகமெங்கும் கோடிகட்டி பறந்த காலமும் இருந்தது. ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், உலக சமாதானமும் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் ஒங்கவேண்டும் என்பதற்காக ஐம்பெரும் தலைவர்கள் செயலாற்றினார். இந்திய உபகண்டத்தின் பண்டித நேரு, சீனத்து சூயேன்லாய் இவர்களுக்கு இணையாகப் பணியாற்றிய பர்மிய நாட்டு தலைவரும் ஒருவர். ஆசிய ஆபிரிக்க மாநாடு பாண்டாங் மாநாடு என 20 ஆம் நுற்றாண்டின் நடுப்பகுதியில் நடந்த வியக்கத்தக்க உலக சாமாதான செயல்பாடுகளாகும். 1975 இல் இயற்கை அடைந்த ஏந்தல் ஊத்தான் எனும் பெருமகன் உலக நடுகல் மன்றத்தின் பொதுச் செயலாளாராக இருந்து நெருக்கடியான காலக்கட்டங்களில் தன்னுடைய அறிவாற்றலைக் கொண்டு போரிலிருந்து உலகை மீட்டவர்களை குறிப்பிடத்தக்கவர் இவர் என்பதை உலகம் அறியும். இரண்டாம் உலக போரின் கொடூரம் ஆசியாவை உலுக்கி எடுத்ததை யாரும் இன்று வரை மறந்திருக்க முடியாது


      நமக்குள்ளே பழங்கதைகள் சொல்லிக் கொள்வதில் பயனில்லை என்பது எங்களுக்கு படுகிறது. அதன் வழியில் 50 ஆண்டுகள் பின்தள்ளப்பட்ட இடத்தில் தள்ளாடித் தள்ளாடி எங்கள் வலுவுடன் எழுந்து நிற்கின்றோம் முன்னேற்றம் காணவேண்டும் என்ற  உணர்வோடு கால்நூற்றண்டுகளுக்கு மேலாக பர்மிய நாட்டு தமிழர்கள் புத்துணர்வுபெற வேண்டும் என்பதற்காக கடும் நெருக்கடிக்கிடையிலும் கட்சி பேதங்கள் காட்டாது சமய வெறி கொள்ளாது தன்மான உணர்வுடன் சுயமரியாதை வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக முற்போக்காளர்கள் அணிதிரண்டு செயலற்றியதன் விளைவால் இன்று பல பிரிவில் தமிழுணர்வும் தன்மான எழுச்சியும் பெற்று வருவது குறிப்பிடதக்கதாக இருந்தாலும் முழு மன நிறைவு கொள்ள இயலாது தவிப்புடன் இருப்பதை காண முடிகிறது

        இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்பது முற்போக்கு அணியினரின் நம்பிக்கை சுடராகும். 1962 ஆம் ஆண்டிற்குப்பின் பர்மா தமிழர் வெளி உலகில் இருந்து ஒதுங்கி விட்டனர் எனபத? ஒதுக்கி வைக்கபட்டு விட்டனர் என்பதா? எதுவும் விளங்க வில்லை இருப்பினும் உலகெங்கும் பறந்து வாழும் தமிழர்களுக்கு இணையாக இருக்க முடியாது போனாலும் பர்மாவில் தமிழர்கள் தமிழர்களாகவே கலை கலாச்சாரம் பண்பாடு குன்றாது வாழ்ந்து வருகின்றனர் பர்ம தமிழர்கள் கலை கலாச்சாரம் பண்பாடுகள் மாறாமல் வாழ்த்து வருகிறார்கள் என்று உலகமும் தமிழ் சமூகமும் அறிய வேண்டும். உலக மயமாக்கல் மத்தியிலும் இந்த சமுதாய சீரழிவுகள் மத்தியிலும் பர்மா தமிழர்கள் தமிழர்களாகவே வாழ்கிறோம் என்பதே நிதர்சனமான உண்மை

        இந்திய விடுதலைக்கு நேதாஜியின் தலைமையில் ஆயுதம்தாங்கிய போராட்டத்தில் உடல் பொருள் உயிர் அனைத்தையும் ஈந்து விடுதலைப் போராட்டத்தில் குழுப் பங்கு கொண்ட தியாகத்தின் சிகரங்களாக தமிழர்கள் இருந்தபடியால்தான் எனக்கு மறுபிறவி இருக்குமானால் அப் பிறவியில் நான் ஒரு தமிழனாக பிறக்கவேண்டுமென நேதாஜி கூறினார் என்றால் தமிழரின் விடுதலை வேட்கையும் நாட்டு பற்றும இனப்பாசம் இவைகளையும் குறைத்து மதிப்பீடு செய்து விட முடியாது இப்படி நேரு உரையில் குறி இருப்பதுடன் ஈழத்து இனப்படுகொலை நடைபெற்றதையும்

       தமிழ் உள்ளத்தோடு தொலை நோக்கிறோம் பர்மாவில் இருபது இலட்சம் தமிழர்கள் வாழ்கிறோம் என உலகுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் இதுநாள் வரை தெரியாமல் போனது ஏனோ? மொரீசியஸ்,பிஜிதீவுகள், ஆபிரிக்க, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இந்தியா(தமிழ் நாடு) என தமிழர்கள்

     தத்தம் சிறப்புகளை அடையாளப்படுத்தும் பொழுது எங்களுக்கு (பர்மா தமிழர்கள்) சின்ன இடம் கூட கிடைக்க வில்லையே என்பது எங்கள் மனதை வாட்டி எடுக்கிறது.

      தமிழைப் பேசி தமிழை வளர்ப்போம் என்று பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம் என முழங்கி வருவதுடன் கோவில்களிலும் தமிழ் போதிகப் பட முயற்சிகள் மேற்கொள்கிறோம் இத்தனை காரியங்கள் தொடர்ந்து செய்தாலும் எங்களை அடையாளம் காணப்படாது போய்கொண்டு இருப்பது ஊமைகள் பேசுவதாக பார்கிறார்கள் என்றோ தோன்றுகிறது ஊமைகள் பேசுவது ஒருநாள் உலகுக்கு கேட்கும் என்பதே உறுதி..!!!

8 comments:

  1. தமிழைப் பேசி தமிழை வளர்ப்போம் என்று பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம்
    ஊமைகள் பேசுவது ஒருநாள் உலகுக்கு கேட்கும் என்பதே உறுதி..!!!
    இப்படை தோற்கின் எப்படை வெல்லும் "
    ............."வீழ்வது யாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாகட்டும்".


    நம் வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!

    ReplyDelete
  2. சார்,

    சத்தியமாக பர்மாவில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, என் போன்ற இளைஞர்கள் இது போல உலக அறிவு அற்றவர்களாகத்தான் இருக்கிறோம்,

    பர்மாவைப் பற்றி முழு பதிவு ஒன்று போடுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  3. நண்பரே.. தயவு செய்து பர்மா தமிழர் பற்றி ஒரு தொடர் எழுதுங்கள்.. நன்றி

    ReplyDelete
  4. பர்மாவிலா !! அருமை...தமிழ் பேசுவார்களா!

    தமிழக அரசு தமிழ் படிக்க உதவ வேண்டும். mauritious ,சவுத் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கும் , தமிழ் நூல்கள்,தமிழ் டிவி வசதி பெற ,தமிழ்நாடு உதவ முன்வரவேண்டும்.

    ReplyDelete
  5. I am a thamilan writing in english from Thamil Ealam. I have to tell you the truth. Better not to initiate anything with a Thamilan. Don't you know the reason why 14 million thamils don't have a country called thamil kingdom? But thamils live in all the countries. My slogam is "Please let me live as a slave"

    ReplyDelete
  6. பர்மாவில் இரண்டு லட்சம் தமிழர்கள் வசிக்கிறார்களா!! இப்பதிவினை படிக்கும் வரை எனக்குத் தெரியாது... ஊமைகள் பேசுவது ஒருநாள் உலகுக்கு கேட்கும் என்பது நிச்சயம் உறுதி..!!!

    ReplyDelete
  7. நண்பரே.. தயவு செய்து பர்மா தமிழர் பற்றி ஒரு தொடர் எழுதுங்கள்.. நன்றி

    ReplyDelete
  8. நண்பரே.. தயவு செய்து பர்மா தமிழர் பற்றி ஒரு தொடர் எழுதுங்கள்.. நன்றி

    ReplyDelete