Thursday 31 December 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்-2010


Glitter Graphics


தமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத ஆண்டாக சென்ற 2009 இருந்தது. ஒவ்வொரு தமிழனும் உங்கள் அத்தியாயத்தில் குறித்துக்கொள்ளும் ஆண்டாக சென்ற ஆண்டு இருந்தது. இதை யாரும் மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது। சில எட்டப்பனால் வந்த வினை. நமக்கு இழப்புக்கள் புதியவை அல்ல எங்கள் தியாக தீபங்களின் கனவை நனவாக்க வரும் ஆண்டிலேயே உறுதி கொள்வோமாக
"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

Wednesday 23 December 2009

நத்தார் தின வாழ்த்துக்கள்

Merry Christmas Comments For Hi5
அனைத்து வலைப்பதிவாளர் , நண்பர்களுக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்

மலேசியா விமானப்படைக்கு சொந்தமான விமான இயந்திரத்தை காணவில்லை..!


ஆசியா நாடுகளிலே மிக வேகமாக வளர்ந்துவரும் நாடு மலேசியா. 2020௦ என்ற தொலைநோக்கு பார்வையோடு வளர்ந்து வரும் நாடு. அதிநவீன கடற்படை, விமானப்படை, தரைப்படை உள்ள நாடு. இப்படி இருக்கும் பொழுது RM5 கோடி (மலேசியா நாணய மதிப்பில்) பெறுமானமுள்ள இயந்திரத்தை காணவில்லை என்றால்.. அந்த நாடுடைய ராணுவ கட்டமைப்பு நிலை?? இதனிடையே இவ்விகாரம் தொடர்பாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறு இருப்பினும் விசாரணையை துரிதப்படுத்தி இதற்கு தீர்வு காண்பதே நாடுக்கும் நாடு மக்களுக்கும் நல்லது.

Saturday 12 December 2009

2010ற்கான நோபல் விருது மஹிந்தவிற்கா??


இந்தவருட நோபல் விருது அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு வழங்கப்பட்டுள்ளது இது சரிதானா? உலகத்தில அமைதியை உண்டுபன்னுவம் உண்டுபன்னுவம் என்று சொல்லியே உலக அமைதியை கெடுப்பதும் அமெரிக்கதானே? தானும் நல்லா இருக்ககூடாது மற்றவனும் நல்ல இருக்ககூடாது இதுதானே அமெரிக்கவின் வெளிவுரவுக் கொள்கை. அமெரிக்க அதிபர் ஒபாமா நோபல் விருது வாங்கியது தவறு என்று சொல்லவரவில்லை. அதிபர் ஒபாமா நோபல் விருது வாங்குவதற்கு இன்னும் நேரகாலம் இருக்கு. இந்த விருது அறிவிக்கும் பொழுதே 3000 துருப்புக்கள் தலிபான்களுடன் சண்டை போடுவதற்கு சென்றுள்ளனர். இப்படி இருக்கும் பொழுது அதிபர் ஒபாமா நோபல் விருது வழங்கியது சரிதானா? நோபல் விருது தேர்வு குழு என்ன செய்துகொண்டு இருக்கிறார்கள் விருதுக்கு எப்படி தேர்வு செய்கிறார்கள் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் சாதாரண வாசகன் என்றவிதத்தில் என் கேள்வி இது? இப்படி இருந்தால் அடுத்தவருடம் உலக சமாதானத்துக்கு பாடுபட்டவர் என்ற பெயரில் மஹிந்தவிற்கோ அல்லது சரத் பொன்சேகவிற்கோ வழங்கப்பட்டாலும் ஆச்சரிய படுறதுக்கு ஒன்றும் இல்லை.